பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19


புராணங்களைப் புதுப்பிப்போம்

(மார்ச்சு - 93)


புராணம் என்ற சொல்லுக்குப் பொருள் பழைய வரலாறு என்பதாகும். தமிழ் மக்களுடைய வாழ்க்கை, நாகரிகத் தடத்தில் நடைபோடத் தொடங்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பல நல்ல கருத்துக்கள் - நீதி சமுதாய நீதி ஆகியவையும் சம்யத் தத்துவங்களும் தமிழ் மக்கள் வாழ்வியலின் ஆக்கமேயாம். பல திருமேனி வழிபாடு முதலினவும் கூட வாழ்வியலைக்களமாகக் கொண்டே தோன்றின. காலப்போக்கில் இந்த உண்மைகளுக்குப் புனிதத் தன்மைகொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நீதிகளும் தத்துவங்களாக்கப்பட்டன.

வாழ்வியல் உண்மைகள் தத்துவ வடிவம் பெற்ற நிலையில் பொது மக்களிடமிருந்து விலகிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் உயர்ந்த தத்துவங்களைப் பொதுமக்களுக் கொண்டு செல்லவேண்டும் என்ற கருத்துத் தோன்றியது. அதனால் மக்களின் கல்வித் தரத்திற்கு ஏற்பத் தத்துவங்களுக்கு, புராண வடிவங்கள் தரப்பெற்றன. புராண வடிவம் பெற்ற காலம் பொது மக்களிடம் வாழ்வாங்கு வாழும்