பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்யலாம். மின்னியல் சார்ந்த பல தொழில்களைத் தோற்றுவித்து வளர்க்கலாம்.

கிராமப்புற வளர்ச்சி பற்றி நிறையப் பேசியாயிற்று! இனி, செய்யவேண்டும். நமது கிராமங்களில், என்று உழவும் தொழிலும் சிறந்து விளங்குமோ அன்றுதான் கிராமங்கள் மேம்பாடு அடையும். கிராமப்புறங்களில் எளிய மூலதனத்தில் தொடங்கக்கூடிய பழங்கள் பக்குவப்படுத்துதல், உணவுப் பொருள்கள் பக்குவப் படுத்துதல் முதலிய தொழில்களைத் தொடங்க வேண்டும். சுகாதார, மருத்துவப் பொருள்கள் உற்பத்தித் தொழிலையும் தொடங்கலாம். இங்ஙனம் கிராமப்புற வளர்ச்சிக்கு நமது நாட்டில் ஏராளமான தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. தேவை, ஆர்வந்தான்! கிராமப் புறங்கள் பண்டகசாலைகளாகவும், நகரங்கள் சந்தைகளாகவும் வளர்ந்தால்தான் கிராமங்களை வளர்க்க இயலும்.

கிராமப்புறங்களில் உழைக்காத மனிதன் இல்லை, விளையாத நிலம் இல்லை, மாடுகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலைமை உருவாக வேண்டும்.


19. [1]டாக்டர் ஜே. சி. குமரப்பாவின்
கருத்துக்களை இன்றைய சூழலில்
நடைமுறைப்படுத்தும் வழிகள்

ந்திய நாடு கிராமங்கள் நிறைந்த நாடு. கிராமங்கள் இயற்கை அமைப்பால் நெற்களஞ்சியம்; செல்வக் களஞ்சியம். நகரங்கள் விற்பனைக்குரிய சந்தைகளே! இதுவே பழங்கால இந்தியா. இன்றைய இந்தியாவில் கிராமங்கள் சுதந்திரமிழந்து ஒளியிழந்து நகர்ப்புறத்தைச் சார்ந்து விளங்குகின்றன. இத்தகு அவல நிலையிலிருந்து கிராமங்களை மீட்கத் தோன்றிய


  1. சிந்தனைச் சோலை