பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

157



29. நினைவு புதுப்பிக்கப்
படுகிறது

ப்போதும் நினைவுப் புலனில் கிடக்கும் ஒரு செய்தி! ஆயினும் எப்போதும் நினைப்பதில்லை. அவசியமில்லாததால்! வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நடக்கும்பொழுது படீரென்று பழைய நினைவுகள் வரும். அத்தருணத்தில் பழைய நினைவுகள் புதுப்பிக்கப்பெறும்.

இன்று நம்முடைய நாட்டு நிகழ்வுகள் நமது நாட்டுப் பழைய நினைவுகளைக் கிளறி விடுகின்றன. நினைவுப் புலன் தொழிற்படுகிறது. இன்றைய நிகழ்வுகள் நினைவுப் புலனில் கிடக்கும் செய்திகளுக்கு இணையாக இல்லை. ஒப்புமையாகக் கூட இல்லை! ஏன்! அறிவுப் புலன் காரண காரியங்களைத் தேடுகிறது! பழைய நினைவுகளை ஆராய்கிறது; பழைய நினைவுகளில் உள்ள செய்திகள் பொய்யா? கற்பனையா? இல்லை! இல்லை! அவை உண்மையே! அன்று வாழ்ந்தனர்! இன்று பிழைப்பு நடத்துகின்றனர்! அன்று அஞ்ச வேண்டியனவற்றிற்கு அஞ்சினர். அதாவது பழி பாவங்களுக்கு அஞ்சினர். அறநெறி பேண அஞ்சியவர்கள் இல்லை! இன்றைய நிலை என்ன?

மக்கட் சமுதாயத்தில் அரசுகள் ஏன் தோன்றின? மக்கட் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில்தான் தேவைக்கேற்ப அரசு தோன்றியது. அரசு தோன்றிய நோக்கம் உழைப்பை விரிவு செய்தல், காவலைப் பொதுமைப்படுத்தல்; வல்லாண்மையின் விளைவாக வல்லாண்மையற்றவர்கள் அழியாமல் அழிக்கப்படாமல் பாதுகாத்தல்! இவையே அரசின் தேவையை உருவாக்கியவை. அரசு தொடக்க காலத்தில் பணியமைப்பாகவே (Service) தோன்றியது. மக்கட் சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த ஓரளவு அதிகாரம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அரசு, அதிகார