பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

323


பெறத் தக்கவாறு சிறப்புடைய முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் ஏற்புடையதே.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எந்த எந்தத் துறையில் பின் தங்கியிருக்கின்றார்களோ அந்த அந்தத் துறையில் சலுகைகள் வழங்கப் பெறுதல் வேண்டும். அதாவது கல்வியில் பின்தங்கியிருந்தால் இடஒதுக்கீடும் மதிப்பெண் சலுகையும் தருதல் வேண்டும். கல்வியில் பின் தங்கியில்லாமல் வளர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களுக்கு உதவிப்பணம் தரவேண்டும். அரசுப் பணிகளைப் பொறுத்தவரையில் பொதுவாக ஒரு குடும்பத்தில் இருவர் அரசிதழ்ப் பதிவுடைய பெரிய பணிப் பொறுப்பில் இருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு செய்யக் கூடாது. அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இப்போது உள்ள 18 சதவீதம் போதாது. மேலும் இடங்களைக் கூட்டி 30 சதவீதம் ஆக்கலாம். பிற்பட்டோருக்கு 50 சதவீதம், மிகவும் கூடுதல் 45 சதவீதம் ஆக்கலாம். பொதுவாகத் தகுதி திறமையின் வழி வருகிறவர்களுக்கு 25 சதவீத இடம் ஒதுக்கலாம்.

–“மக்கள் சிந்தனை” 1–7–81
(11–10–80 இரத்தினகிரி திருக்குறள்
பேரவை மாநாட்டுத் தீர்மான விளக்கம்)


8. [1]தீண்டாமை நீங்க...

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றது உலகப் பொதுமறை. அதோடு "சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்” என்றும் கூறியது. அதாவது பிறப்பால் எல்லாரும் ஒரு தன்மைத்தானவர்கள் என்பதாகும். பிறப்பில்


  1. மயிலாடுதுறையில் 21–9–1989இல் பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்திய திருநாளைப் போவார் சமூக நலக் கருத்தரங்கில் ஆற்றிய மையக் கருத்துரை.