பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சார்ந்த திருவிழாக்கள், தேசீயத் திருவிழாக்கள் முதலியவற்றைச் சிறப்பாக நடத்த வேண்டும்.

முடிவுரை

சமூகப் பார்வையில் கிராமங்களின் மேம்பாடு பற்றிய பல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளோம். இவையெல்லாம் தாங்கள் அறிந்தவையே. தாங்கள் அறிந்தவைகளையே தங்களுடைய மேலான நினைவிற்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.

பொதுவாக, இந்தியாவில் கிராம சமூக மக்களுக்கு சமூக நீதி வழங்கப் பெறவில்லை என்பது நமது கருத்து. கிராமப்புற வளர்ச்சிக்குரிய நிறுவனங்கள் உயிர்ப்பாக இயங்கவில்லை. ஆயினும் சென்ற காலத் தவறுகளை நினைத்து அழுவதால் என்ன பயன்? விளையும்? சுவாமி விவேகானந்தர்.

"We have wept long enough. No more weeping now; but let us stand on our feet and be men.

"நீண்ட காலம் அழுதுவிட்டோம்; இனிமேலும் அழ வேண்டாம்! அழுதது போதும். நமது கால்களையே நம்பி நிற்போம்! மனிதர்களாக நிமிர்ந்து நிற்போம்.”

என்று சொல்லிய அருளுரையை நினைத்து எழுவோம்! விழிப்புடன் உழைப்போம்!

கிராம மக்களிடையே நிலவும் வறுமை, சமத்துவ மின்மை, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிப் புதிய சமுதாயம் காண்போம்.

திட்டமும் செயல்முறைகளும் இணைந்த வாழ்வியலே வரலாற்றை மாற்றும்.

இந்திய நாட்டின் கிராம வளர்ச்சியில் சமூகப் பார்வை என்ற ஆய்வுப் பணிக்காகக் கூடியிருக்கும் அறிஞர் பெரு மக்களே! தங்களுடைய ஆய்வுக்கு நிறைய செய்திகள்