பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

371


என்பது கடவுள் நெறியாகிய அன்பு நெறியில் அருள்நெறியில் நிற்றலேயாம். இந்த உயர் பதவிக்கு ஓரளவு துணை செய் வனவே சடங்குகள்! இன்று சடங்குகள் சமயமாகிவிட்டன!

உண்மைச் சமயநெறியில் நின்று எய்தற்கரிய மானுடம் போற்றி வாழ்வோமாக!

12. இளைஞர்களுக்கு வேண்டுகோள்!

மாணவ நண்பர்களே! நாட்டின் வரலாற்றை உற்று நோக்குங்கள்! சென்ற காலத் தலைமுறை அரசியல் விடுதலையைப் பெற்றுத் தந்து புகழ் சூடிக்கொண்டது! உங்களின் நேர் மூத்த தலைமுறையினராகிய நாங்கள் என்ன செய்தோம்? குறிப்பிடத் தக்கதாக எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை. நாட்டில் நாங்கள் உங்களுக்காக விட்டு வைத்திருப்பது சாதி, மதச் சண்டைகள்! எழுதப் படிக்கத் தெரியாத கோடானு கோடி மக்கள்! வேலையில்லாத் திண்டாட்டம்! வறுமைக்கோடு! கடன் சுமை ஆகியனதாம். இவைகளுக்குப்பாலும் சில நடந்திருக்கின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது. அந்த நல்லனவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றை எங்களை மன்னிப்பதற்குக் காரணமாக்கிக் கொள்ளலாம்.

பழி சுமத்த மக்களை சுமந்து நாடு எய்த்து விட்டது! களைத்துவிட்டது. நீங்கள் கல்லூரி வளாகத்திலிருந்து நாட்டுக்கு வரும்போது நாட்டைத் தாங்கிப் பிடிக்கும் வலிமையுடைய தோள்களுடன் வெளிவருக! துணிவு கொண்ட நெஞசத்துடன் வருக! இன்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எத்தகைய கல்வியை விரும்புகிறீர்கள்? எந்த வகையான நூல்களைக் கற்கிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? நாட்டு நலனுடன் மக்கள் சமுத்திரத்தின் நலனுடன் உங்கள் நலன் ஒத்துப் போகிறதா? என்றெல்லாம் நோக்கி, முரண்பாடுகளை அறவே நீக்கி, பொது நலன்தான் தனி மனித நலனை பேணும்