பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

379


கூறுவர். திருக்குறள் "அச்சமே கீழ்களது ஆசாரம்” என்றது. அஞ்சி அஞ்சிச் சாவதைப் பேதைமை என்றும் ‘அச்சம் தவிர்’ என்றும் பாரதி கூறினான். ஆதலால், பயத்தை நீக்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்று, பயத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். பயத்தைத் தொடர்ந்து வரும் அழுக்காறு, அவா, வெகுளி முதலாய தீமைகளையும் அறவே அகற்றுதல் வேண்டும். இதற்குரிய சாதனம் கல்விதான்; கற்றல்தான்! திருக்குறள்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

–குறள் 391

என்றது. மனிதன் ஓர் அறிவு ஜீவி. மனிதன் அறிவு பெற்றால் தான் மனிதனாகிறான். இல்லையானால் அவனைக் கால் நடை என்றுதான் கூறவேண்டும். நாடு தழுவிய, தழீஇய வாழ்க்கைக்குக் கல்வி தேவை. நாள்தோறும் மரணம் வரையில் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பதே வாழும்

மனிதன் கற்றால் போதாது. அறிவு வேண்டும். கல்வி, அறிவு பெறுதலுக்குரிய வாயில். ஆனால், கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களாகி விடுவதில்லை. “கற்றநிர் மூடர்” என்பர் தாயுமானார். “பல கற்றும் கல்லார் அறிவிலாதார்” என்று திருக்குறள் கூறும் இன்று பலருக்கு அறிவு என்றால் என்ன என்பதே தெரியாது. அறிவு விவரங்கள், தகவல்கள் தெரிந்து கொண்டு அவற்றைச் சொல்வதல்ல. அறிவு, வினாக்களுக்கு விடை கூறுவது அல்ல. அல்லது நூல்கள் எழுதிவிடுவதும் அல்ல. அறிவு ஒரு சிறந்த கருவி. அறிவைக் கருவி என்று கூறிய முதல் சிந்தனையாளர் திருவள்ளுவர்தான். அறிவு ஒரு கருவி. மனிதன் அறிவைக் கருவியாகக் கையாளத் தொடங்கிய பிறகுதான் வரிசையாகப் பலப்பல புதுப்புதுக் கருவிகள் தோன்றி வளரலாயின. மனிதனுக்குக் கருவிகளுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான்