பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வராது போனால் அவன் மனிதனா? அவனுக்குச் சூடு, சுரணை இருக்கிறது என்று யாரால் நம்ப இயலும்?

விவேகானந்தரின் அடிச்சுவட்டில் வறுமையை – ஏழ்மையை எதிர்த்துப் போராடுவதுதான் குன்றக்குடித் திட்டம்!

இளைஞர்களே!

‘வேலை இல்லை’ என்று சொல்லாதீர்கள்! முணு முணுக்காதீர்கள்!

விவேகானந்தரின் அடிச்சுவட்டில் எழுந்து நடை போடுங்கள்!

துருப்பிடித்த இரும்பு ஆகாதீர்கள் ! காய்ச்சிய இரும்பாக வலிமை பெறுங்கள்!

துருப்பிடித்த இரும்பு அடி தாங்காது! சுக்குத் தூளாகப் போய்விடும்! காய்ச்சிய இரும்பு வலிவும் பெறும்; எந்த உருவத்தையும் பெறும்!

அதுபோலக் கடின உழைப்புக்கு ஆயத்தமாகுங்கள்! வருந்தி உழைக்க மறுக்காதீர்கள்! மறந்து விடாதீர்கள்! மனநிறைவை நாடாதீர்கள்!

பெருந்தவ நோக்கங்களை ஏற்பீர்! காடுகளை வளர்ப்போம்! கழனிகளைத் திருத்துவோம்! உண்ணும் பொருள்களை விளைவித்துக் குவிப்போம்! பஞ்சத்திலிருந்து நமது சகோதரர்களை மீட்போம்!

இந்தப் போருக்கு ஆயத்தமாகுங்கள். போதும்!

பேச்சுக் கச்சேரி, எரியுங் கட்சி; எரியாத கட்சிச் சண்டைகள் வேண்டாம்.

“சாதி, சமயம், நிறம் வேற்றுமை இல்லாமல் எல்லாரிடமும் எல்லா நிலையிலும் தன்மையை விரும்பும் உணர்வே வேண்டும்” என்பது விவேகானந்தரின் போதனை.

இந்தப் போதனையை வாழ்வாக்க என்ன தயக்கம்?