பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உரையாடா” திருப்பது மரபன்று, “காகம் போல் உறவு கலந்து உண்பதே” நமது மரபு. உரையாடலில்தான் உறவு வளரும், கூடி உண்ணும் பழக்கத்தைக் குடும்பத்தின் நடைமுறையாக்குக.

நீங்கள் புது வீடு கட்டி அதில் குடியேறியிருக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி. ஆம்! பழங்காலத்தில் ஒவ்வொரு தலைமகனும் தானே பொருளீட்டி மகட்கொடை தந்து திருமணம் செய்து கொண்டான். இன்றோ தலைமகன் மணமகள் வீட்டாரிடம் கொடை எதிர்பார்க்கிறான். இது மரபும் அன்று, அறமும் அன்று, அதுமட்டுமா? ஒவ்வொரு குடும்பத்தினரும் அக்குடும்பத்தின் தலைவன் ஈட்டிய பொருளில் வீடு கட்டி வாழ்வர். அந்த வீட்டில் தாமே ஈட்டிச் சேகரித்த பொருள்களைக் கொண்டு சுவையாகச் சமைத்துத் தமது சுற்றத்தாருடன் கூடி உண்பர். இங்ஙனம் வாழ்கின்ற இன்பம்–இல்லற இன்பம் மேலானது என்பது திருக்குறள்

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு” –குறள் 107

என்பது குறள்.

தமிழர் மரபில் கூட்டுக் குடும்பம் கிடையாது. கூட்டுக் குடும்ப முறை அயல் வழக்கு இளங்கோவடிகள் கோவலன்–கண்ணகி தனிக்குடித்தனம் தொடங்கியதை மனையறம் படுத்த காதையில் விவரிக்கின்றனார். இன்றும் பழந்தமிழ் நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு வாழும் நகரத்தார் சமூகத்தில் வேறு வைத்தல் என்ற பெயரில் மகன்–மருமகளுக்கு தனிக்குடும்பம் அமைத்தல் என்ற நிகழ்ச்சி முறை இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தில் வெற்றி காண்பவை மிகச் சில குடும்பங்களே! பல குடும்பங்கள் மன முறிவுகளுக்கு ஆளாகின்றன. வாழ்க்கையின் சுவை, நபர்கள் தோறும் மாறுபடும். வாழ்க்கையை அனுபவிக்கும்