பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

569


தமிழ் இனத்திற்குத் தந்த பெருமை அநபாய சோழனுக்கு உண்டு மூவேந்தர் ஆட்சிக்குப் பிறகு தமிழுக்கு அரணாகத் தமிழ்ச் சங்கம் இல்லாத குறை இருந்தது. இராமநாதபுரம் மன்னர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கம் கண்டு, அக்குறையைப் போக்கினார். அதனைத் தொடர்ந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரப் பிள்ளை அவர்களால் தொடங்கப் பெற்றது. பாண்டித்துரைத் தேவர் அவர்கட்குப் பின் மீண்டும் தமிழ்ச் சங்க நடைமுறை தடைபட்டது அதனைத் தமிழ்வேள் பி.டி. இராசன் அவர்கள் மீண்டும் புதுப்பித்துப் புத்துணர்வுடன் மதுரைத்தமிழ்ச் சங்கத்தை நடத்தி வருகின்றார்கள். அதனைத் தொடர்ந்து முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் புலவர் குழுவைத் தொடங்கிச் சிறப்புற நடத்தி வருகிறார்கள். இவையெல்லாம் தமிழுக்கு அரண்செய்யும் அமைப்புக்கள். இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவர்க்கும் நம்முடைய நன்றி உணர்வுடன் கூடிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரிமைப்படுத்துகின்றோம். இச்சூழ்நிலையில் சைவத்தோடு தொடர்புடைய தமிழுக்கும், அரண் செய்யக்கூடிய அமைப்புக்கள் யாதொன்றும் இல்லை. ஒரு கருத்தைத் தோற்றுவித்து இது சரியென்று நிர்ணயிக்கின்ற சக்தியைச் சைவத்தமிழ்த் திருமடங்கள் பெற்றிருக்கவில்லை. அவைகளுக்குள்ளும் உளமார்ந்த இசைவும் இணைப்பும் இல்லை. இந்நிலைமாற அருள்பாலிக்கும் வண்ணம் பிரார்த்திப்போமாக சமய உலகக் கருத்தில் ஆட்சி செலுத்தி நிர்ணயிக்கக்கூடிய சக்தியை இன்று பிறதுறை மடங்களே பெற்றிருக்கின்றன. ஆதலால் சைவத் துறையில் - சைவக்கருத்துக்களில் - சைவ நடை முறைகளில் - சைவ நிறுவன அமைப்புக்களில் - எது அல்லது எவை சரியான கருத்தென்று நிர்ணயிக்கக்கூடிய ஒரு உயர்நிலை அமைப்பு இன்றைய உடனடியான தேவை. இந்தத் தேவையை நிறைவு செய்யும் வகையிலேயே இத்திருப் புத்தூர்த் தமிழ்ச் சங்கம்