பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


      உரிமைத் திறத்தினை உரத்த குரலில்
      எடுத்து முழக்கிய நின்தறு கண்திறன்
      வியர்ந்துவாழ்த் துதுமே! வியந்துவாழ்த் துதுமே!


2. காவிரி மீட்கும் போர்க்களத் தலைவர்


        தண்ணார் தமிழளிக் கின்ற புகழ்சால்
        நாட்டுக் கலைஞர்; நம்முத லமைச்சர்!
        வள்ளுவத் திற்கு வான்புகழ் சேர்க்கும்
        எழில்மிகு தலைவர்! இராசரா சனுக்குப்
        புகழினைச் சேர்க்கும் தகைமிகு தோன்றல்!
        நலம்பல மகளிர் எய்திட நல்லறம்
        பலப்பல இயற்றிடும் பண்புசால் முதல்வர்!
        இல்லை யெனும்சொல் இல்லாமை யாகவும்
        எல்லாரும் உடையும் உணவும் பெற்று
        நல்லின்ப வாழ்வு நாளும்எய் திடவும்
        எண்ணி எண்ணி ஏணியைப் போலே
        பலர்வாழ் வுயர்ந்திடப் பாங்குடன் தாங்கும்
        ஏந்தல்! கங்கையிற் புனித மாகிய
        காவிரி மீட்கும் போர்க்க ளத்தினில்
        நிற்கும் தலைவர் நற்றமிழ் நாட்டுப்
        பெரியீர் அறிமின் அறிமின்! அறிந்து
        பூம்புகார்ப் புகழ்ஒளி நாயகர் கலைஞர்தம்
        கொற்றம் சிறக்கவும் அவர்தம் கொள்கை
        முற்றவுவும் அவர்கண் டனைய தியற்றவும்
        படையின ராகப் பாங்குடன் வருகவே!"


3. இன்றே போல்க நம் புணர்ச்சி


        ஞாயிறு திரிதரு ஞாலத் தினில்தென்
        தமிழும் தென்றலும் தண்ணென்றுல்விடும்
        தமிழகத் தின்தன் னேரிலா முதல்வ!