பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


25. கயிலைக் குருமணி அவர்களுக்கு
வாழ்த்தும் அஞ்சலியும்

தருமையும் கமலையும் விரிதமிழ்க்கூடலும்
திருநக ராக அரசுவிற் றிருந்தவ,
பல்லுயி ருக்கும் பவசம் பந்தம்
மாற்றிய ஞானசம் பந்தமா முனிவ,
அறுபடை வீட்டில் அமர்ந்தருள் வழங்கும்
அண்ணலின் பெயர்தம் உரிமையாக் கொண்ட
சொற்பொருள் தேடும் சுப்பிர மணிய
தேசிக கயிலைக் குருமணி! நீயே
ஒன்றுக்கும் போதா என்றன் உளத்தினில்
புகுந்து நின்றனை, புகலரும் பெரியோய்!
கண்ணப்பன் அன்பைக் காளத்தி யப்பன்
உகந்த தற்குக் காரணம் என்னை?
அங்ஙனே போதிலும்நின் அன்பே! ஆனால்
கண்ணப் பன்தன் கண்ணினைத் தந்தான்.
யாது.நீ பெற்றனை என்பால் ஐயனே!
உமையொரு கேள்வன் உலகுடை நாயகன்
என்னுயிர் எடுத்துக் கொண்டுநின் னுயிரை
மண்ணில் தவழ்ந்திட மனங்கொண் டானவன்!
மன்னு மாமலை கயிலை யதனிலே
எந்தை ஈசன் தனக்குத், தாயிற்
சிறந்த பரிவுடன் செய்ம்முறைப் பாங்குடன்
பணிகள் செய்திடும் அடியா ரிலாத
நிலையில் நினைவந் தழைத்தனன் கொல்லோ?
ஆலால சுந்தரன் என்ன ஆயினன்?
பண்டொரு நாள் அவன் அணுக்கத் தொண்டினை
மறந்து காதல் மயக்கங் கொண்டிட