பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தக்க வாறு திருத்தம் காணல்,
பற்றிய நெருப்பெனப் படர்ந்து கனன்று
உற்ற கடமையைச் செய்தல் ஒயாப்
போர்க்கு ணத்தினைத் தாழாது பெறுதல்
இன்ன இயல்புகள் யாவும் ஆளுமை
இயல்புகள்! இவற்றை ஏற்றுநாம் பேணின்
நமது ஆட் சித்திறன் நனிசிறந் திடுமே!
கோப்புகள் நகர்தல் ஆட்சிக்குத் துணையே!
கோப்புக ளுடன்குறிக் கோளுமுடைய
மனிதனும் மாட்சித் திறன்கள் பலப்பல
கைக்கொண் டாலே காரியம் நிகழும்;
வளமும் கொழிக்கும் வாழ்வும் சிறக்கும்;
நனிசிறந்து நாளும் வாழ லாமே!