பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




54. கவலை விடு!

ஓ ... மனிதனே!
கன்னத்தில் கைவைத்துக் கலக்கத்துடன் உட்கார்ந்து
உருக்குலையும் மனிதனே!
என்ன வந்தது? என்ன கவலை உனக்கு?
ஏழரையாட்டைச் சனி வரப்போகிறதா?
அந்தச் சனியன் பல துன்பச் சுமைகளைத் தருவான் என்று
இப்போதே நம்பிக் கவலைப்படுகிறாயா?
துன்பக் கற்பனை செய்கிறாயா?
ஓ... மனிதனே!
அன்றாடம் ஆயிரம் ஆயிரம் துன்பங்களைச் சந்திக்கிறாய்!
இது போதாதா?
இனிவரும் துன்பம் பற்றியும் எண்ணி ஏங்குவானேன்?
எதையும் ஏற்றுத் தீர்வு காணலாம்!
ஆயினும்,
கற்பனைத் துன்பத்தின் முன் என்ன செய்ய இயலும்?
நிழலுடன் போராடி எய்ப்பதுதான் மிச்சம்!
வாழ்பவருக்கு ஒருபோதும் துன்பம் வராது!
வந்ததூஉம் இல்லை
வாழ்க்கை வளமாக,
துன்பங்கள் தொல்லைகள் பற்றிக்
கற்பனை செய்யாது வாழ்க!