பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

275


105. வேண்டாம், தற்புகழ்ச்சி!

கூவாத சேவல் சிறகடித்துப் பார்க்காத சேவல்!
சேவல் சண்டைக்கும் தகுதியிலாது
கொழுத்து வளர்ந்த சேவல்!
எது எது இல்லையென்றாலும்
அதன் சதைக்காக ஏலம் போகும்!
கழுதை தான் கத்துவதன் மூலம்
விண்மீன்கள் உதிர்கின்றன என்று கூறலாம்!
ஆயினும் என்?
இந்தப் பேருலகில்
தற்புகழ்ச்சி எதையும் சாதித்தது இல்லை!
கேட்டதெல்லாம் கொடுக்கும் கடவுளிடத்திலும்
எதையும் பெற்றதில்லை!
தற்புகழ்ச்சிக்குத் தான்
இல்லாதது எது என்று தெரியாதே!
இன்றே புகழ்ந்து பேசி முடித்துக்கொள்ளும்!
நாளைக்கு என்று எதுவும் வேண்டாம்!
எப்படிப்பட்ட முடக்குவாதம்? வறட்சி? பகடித்தனம்?
உன்னை மக்கள் மதிக்க வேண்டுமா?
உன்னைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்!
தற்புகழ்ச்சி பயனற்றது
வேண்டாம்! வேண்டாம்!
தனக்குத் தானே அடங்கு!
மண்ணில் மறைந்து ஒடிவளர்ந்து
மரங்களைச் செழிக்கச் செய்யும் வேர்களைப்போல
சமுதாயத்தின் வேர்களாகுக! வேர்களாகுக!