பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




207. இதயத்தை ஆள்!

மனித உரிமைகளைக் கருவூலமாகக்
கொண்டிருக்கும் மனிதன்
அமெரிக்காவின் வாஷிங்டன் செய்தது போலச்
செய்து சிறப்புறுதல் வேண்டும்
வாஷிங்டன் வாழ்க்கையின் ஊதியம்
எதுவென எண்ணினானோ
அதையே, ஒவ்வொரு மனிதனும் முதன்மைப்படுத்த
வேண்டும்.
மனிதன் - மனிதன் உருவாக்கம் பெற்றுள்ள
படிவத்தை நோக்கின்
அவன் தனியே வாழ்வதற்குப் படைக்கப்பட்டவன் அல்ல-
என்ற உண்மை புலனாகும்!
இதுவே, வாஷிங்டன் உணர்ந்த உண்மை.
வாஷிங்டன் எதிர்ப்புகளை ஏற்று நின்றான்!
அதுபோல நிற்கவும்
வாஷிங்டன் கட்சிமனப் பான்மையையும்
வஞ்சனையையும் கடந்து உயர்ந்து நின்றான்!
வாஷிங்டன் உயர்ந்து நின்று விளங்கினான்!
ஆனாலும் அரசனாகி ஆள மறுத்தான்;
வாஷிங்டன் அனைவரையும் நம்பினான்
மனிதன் காரணங்களுடன் நிற்கின்றான்!
அது என்ன காரணம்? நல்ல அரசனா?
அவன் நாட்டை ஆளமாட்டான்;
மக்களின் இதயத்தை ஆள்வான்!