பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடிப்பு:

அன்னை தாசன் அமுதெனத் தந்த
அருளின் மாட்சியை அருளின்ஆக் கத்தைச்
செவிகள் குளிர நாமெலாம் கேட்டோம்!
இதயத் திருத்துவோம்! அருளின்ஆட் சியையே!

புலவர் எச். முஸ்தபா - அறிமுகம்
“பொங்கல் சிறக்கவே - வீரத்தினால்!”


வீரம் என்பது விவேகம் நிறைந்தது!
வீரம் என்பது மானிட உலகை அ
ழிக்கும் போரினில் காட்டுவ தன்று!
மன்பதை காப்பதே மாபெரும் வீரம்!
பொறிகளின் மீது தனியர சாணை
செலுத்துவ தொன்றே சிறந்தபே ராண்மை
இன்று மானிடம் அவாவி நிற்பது
போரிடும் உலகத் தைஉரு வாக்கும்
வீரமன்(று)! எவர் மாட்டும் நல் லன்பு,
தன்னல மற்ற தகைசால் உழைப்பு
பிறர்நலம் பேணும் பெருமைசால் நோன்பு!
மன்னுயி ரனைத்தும் காத்திடும் திறம்! - இவை
வேண்டிநிற் கின்ற வீரமே யாகும்!
“அளவற்ற அருளாள னாகிய
ஆண்டவன்,
உயிர்களுக்(கு) இரக்கம் காட்டு வார்க்கு
உவந்தருள் செய்வான்” எனும் நபி நாயகம்
நெறியினைப் பேணும் இனியநற் கவிஞர்
முஸ்தபா கவிதை முழங்குவார்! வருகவே!