பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

91


“மடத்தின் வேலை அரண்மனை வேலை போல! அரைக்காசு சம்பளமானாலும் பரவாயில்லை...உயர்ந்தது!"- மடத்தின் வேலையைப் புகழ்ந்தார். எல்லை கடந்த நிலையில் "வெட்டிச் சோறு” -என்பன போன்ற கடுஞ்சொற்கள் வெளிப்பட்டன.

ரெங்கநாதன் உணர்ச்சிவசப்பட்டான். தருமபுரம் மடத்துக்கு வேலைக்குப் போய் விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மறுநாள் காலை தருமபுரத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டான் தனியாக!

மகா சந்நிதானம் அவர்களின் பேட்டி எளிதாகக் கிடைத்து விட்டது! நல்லூழ் போலும்!

வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்ட உடனேயே வேலையும் கிடைத்து விட்டது! தபால் பதிவு எழுத்தர் வேலை! மாதம் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சம்பளம். இரண்டு வேளைச் சாப்பாடு. வேலை பார்த்துத்தான் முன்னேற வேண்டும். பிழைக்க வேண்டும் என்ற உணர்வு பிடரியைப் பிடித்து அழுத்தியதால், வேலையில் மிகவும் கவனம்.

ஆதீன அலுவலகத்தில் நிறைந்த அனுபவம் உள்ளவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்களிடம் வேலை செய்தது ஒரு தனி அனுபவம்! பத்திரிகைகள் படிப்பதைத் தவிர வேறு எந்தப் பொழுதுபோக்கையும் அப்போது விரும்பியதில்லை! வீட்டுக்குப் போகவும் விருப்பமில்லை. ஆதலால், விடுப்பு எடுப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வேலை செய்வது வழக்கமாயிற்று. ஆதலால் வேலையை நன்றாகச் செய்ய முடிந்தது.

அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்த ஜெயபால் நாயனார் என்பவர் ரெங்கநாதன் வேலை கற்றுக் கொள்வதற்கு துணைசெய்தார். அது மட்டுமல்ல... மடத்தின் பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். காலப்-