பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் முதலியோர் சங்க உறுப்பினர்களாக அப்போது இருந்தனர். தலைசிறந்த தமிழறிஞர்களைக் கொண்ட இந்தத் திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம் டிசம்பரில் கூடியது. இந்தக் கூட்டத்தில், 'உலகத் தமிழ் மாநாட்டில் தமிழறிஞர்களின் சிலைகளைத் திறக்கும் போது அப்பர் அடிகள் சிலையையும் திறக்கும்படி தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வது' என்று தீர்மானம் நிறைவேறியது.

முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து இந்தத் தீர்மானத்தைத் தந்து எடுத்துக் கூறி இசைவுபெறும் பணியைத் திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம் நம்மிடம் ஒப்படைத்தது. இதற்காக நாம் சென்னைக்குச் சென்றோம். மயிலையில் உள்ள குன்றக்குடி ஆதீன மடத்தில் தங்கினோம். முதலமைச்சர் அறிஞர் அண்ணா அலுவலகத்துக்குத் தொலைபேசி வழிச் சந்திப்புக்கு வாய்ப்புக் கேட்கப்பட்டது. சரியாக ஒரு மணி நேரத்தில் அழைப்பு வந்தது. அறிஞர் அண்ணா, அவர்தம் இல்லத்தில் பொங்கிவழியும் புன்முறுவலுடன் நம்மை வரவேற்றார். உடன் கலைஞரும் இருந்தார். நலம் விசாரித்தல் முதலியன முறையாக நடந்தன.

திருப்புத்துார் தமிழ்ச் சங்கத் தீர்மானம் பற்றி நாம் எடுத்துக் கூறி அப்பர் அடிகள் சிலையை மெரீனாக் கடற்கரையில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அறிஞர் அண்ணா, உடனடியாக முறுவலித்துக்கொண்டு-

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்;
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற் சங்க வெண் குழையோர் காதிற்