பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பெற்றவர்கள். தமிழ்த் துறை அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட துறை. அரங்கநாதன் குடும்பம் சொத்து இழந்து நிற்கும் நிலையில் பரம்பரைச் சொத்தை விற்க உரிமை இல்லை என்ற அடிப்படையில் சீகாழி முன்சிப்கோர்ட்டில் வழக்கினைத் தொடுத்துச் சொத்தை மீட்டுத் தந்தார்கள் பிள்ளை.

வழக்கில் அரங்கநாதன், அவருடைய மூத்த அண்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாதிகள். நேர் மூத்த அண்ணன் பாண்டுரங்கன், அரங்கநாதனின் பெரிய தந்தைக்குப் பிள்ளை போனதால் அவரைச் சேர்க்கவில்லை. ஆனால், பாண்டுரங்கன் பிள்ளை போன இடத்தில் சொத்து மீட்பு முயற்சியில் முழு ஒத்துழைப்பு தராததால் தோல்வி அவருக்கு ஒன்றும் இல்லை. அரங்கநாதன் பேரிலும் கோபாலகிருஷ்ணன் பேரிலும் சொத்து கந்தசாமித் தம்பிரான் (அரங்கநாதன்) தன் பங்குச் சொத்தைப் பிரித்துப் பெற்றோருக்குத் தர எண்ணினார். குன்றக்குடிக்குப் போன பிறகு அவர்கள் நிம்மதியாக வாழ! அதேபோல் பாண்டு ரங்கனுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் எண்ணம், அரங்கநாதனின் மூத்த அண்ணன் அழைப்புகளுக்குச் செவி கொடுக்க வில்லை; வரவில்லை. ஆனால் வந்த செய்தி கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் உதவியை நாடிவிட்டார் என்பது. வழக்கறிஞர்கள் "இந்துச் சட்டப்படி சந்நியாசியாகப் போனவர்களுக்குக் குடும்பச் சொத்தில் உரிமையில்லை" என்றனர்.

கந்தசாமித் தம்பிரான் அதிர்ச்சியடைந்தார். ஆனால், மனித இயல்களை, உறவுகளை இழந்துவரும் சொத்தினால் பயன் என்ன? இந்த நிலையில் கந்தசாமித் தம்பிரான் தொடர்ந்து முயற்சி செய்து நீண்ட விவாதத்துக்குப் பிறகு குடும்பச் சொத்து நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு பாகம் மூத்த அண்ணன் கோபாலகிருஷ்ணனுக்கு, ஒரு பாகம் பிறப்புரிமை, மற்றொரு பாகம் அதுவரையில் உழைத்துக் குடும்பத்தைப் பாதுகாத்ததற்காக!, அரங்க