பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

147



நாதனுக்கு ஒரு பாகம், பாண்டுரங்கனுக்கு ஒரு பாகம் என்று பிரித்துப் பத்திரம் எழுதப் பெற்றது! அரங்கநாதனுடைய பங்கு பெற்றோர் பெயருக்குப் பத்திரம் எழுதிப் பதிவு செய்யப்பட்டது. பெற்றோருக்குப் பிறகு அவர்கள் விருப்பம் போல செய்து கொள்ளலாம் என்பது பத்திரத்தில் கண்ட விதிகள். இந்தப் பணிகள் முடிந்தது.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றியதன் மூலம் பெற்றோர் குன்றக்குடிக்கு வருவது தவிர்க்கப்படும் என்பது கந்தசாமித் தம்பிரானின் கருத்து. மனிதனுக்கு இயல்பாய் அமைந்த முதல் சுற்றம் ஈன்றெடுத்த தாய்வழி அமைவது. ஆனால், மனிதன் வளர்ந்து அன்பினால் மற்றவர்களையும் சுற்றமாக்கிக்கொண்டு வாழ்தல் வேண்டும். அன்பினால் அமைந்த சுற்றம் அறநிலையங்களைச் சார்ந்து அமைதல் முறை. ஈன்றவழிச் சுற்றத்துக்கு தடையில்லை எனினும், ஆக்கம் வழங்குதல் இல்லையென்பது ஆன்றோர் கண்ட மரபு.

பெற்றோர் மூத்த பிள்ளையிடத்திலேயே இருந்தனர். அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் தங்கள் பங்கை எழுதிக்கொடுத்துவிட்டார்கள். இப்போது பெற்றோர் இல்லை. மூத்த சகோதரரும் இல்லை. அந்தக் குடும்பத்தை எடுத்து நிறுத்தும் முயற்சியில் அரங்கநாதனின் ஊக்கம் வரவேற்கப்படவும் இல்லை. இன்று அந்த குடும்பத்துக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஏதும் இல்லாது போனது ஒரு குறையே! அந்தக் குடும்பத்தில் உருவாக்கப்பட்ட அறக் கட்டளைப் பணிகள் அரங்கநாதன் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தபோது இருந்த நிலையே இன்றும்! தர்ம கர்த்தாக்கள் மாறுகிறார்கள். ஆனால், தர்மம் நடப்பதில்லை!

16

{{gap}குன்றக்குடியில் 5-9-1949 அன்று காலை பத்து மணியளவில் கந்தசாமித் தம்பியாரன், ரீமத் தெய்வ