பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழ் அர்ச்சனை இயக்கத்தை கண்டவர்கள் சிவபெருமானும் திருமாலும்தான்! அர்ச்சனை பாட்டேயாகும் என்று பாடச்சொல்லிக் கேட்டவன் சிவபெருமான். திருமாலும் ஆண்டாள் நாச்சியார் பாடலுக்குக் குழைந்தான். இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தத் தமிழ் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. சாத்து முறை இல்லாமல் பூஜை நிறைவுபெறுவது இல்லை. சைவத் திருக்கோயில்களில் தான் திருமுறைகள் போதிய இடத்தைப் பெறவில்லை. நமது விளக்கங்களுக்குரிய ஆதாரங்களையும் ஆதாரமாக அமையும் நூல்களையும் திரட்டி அடையாளம் வைத்து, 52 புத்தங்கள் அடங்கிய ஒரு சிறு நூலகம் போல அமைத்துப் பேட்டிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே முதலமைச் சருக்கு அனுப்பிவைக்கப் பெற்றது.

பேட்டிக்குச் செல்வோர் பட்டியல் தயாரிக்கப்பெற்றது. 63 தமிழறிஞர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப் பெற்றனர். தவத்திரு சாந்தலிங்க ராசமசாமி அடிகள், இளவழகனார், கழகப் புலவர் ப. ராமநாதபிள்ளை, மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர், மகாவித்வான் சி. அருணைவடிவேல் முதலியார் என்று அன்றைய தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் பலர் இந்தக் குழுவில் இருந்தனர். இவர்கள் எண்ணிக்கை 63. இது 63 நாயன்மார்களின் அடையாளம்! எல்லோரும் 12 கார்களில் முதலமைச்சரைக் கானச் சென்றோம். இது 12 திருமுறைகளுக்குச் சான்று. முதலமைச்சர் அகமும் முகமும் மலர வரவேற்றார். விவாதமே இல்லாமல் "திருமுறைத் தமிழ் அர்ச்சனை எனக்கு உடன்பாடே" என்று தெரிவித்தார்.

அதன்பின் 4-10-61-ல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பி.டி.ராஜன் தலைமையில், நமது முன்னிலையில் திருமறைத் தமிழ் அர்ச்சனையை பக்தவத்சலம் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்குத் திருக்கோயில்