பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

187


பெரியாருக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் இணைந்து மேடையில் உட்கார்ந்திருந்து கலந்து பேசியது. எங்களுக் கிடையில் அடிக்கடி சிரிப்பு. எல்லாவற்றிலும் திராவிடர் கழகத்தினருக்கு அளவற்ற மகிழ்ச்சி. போட்டோகிராபர்கள் பற்றிச் சொல்ல வேண்டாம்.

விழாவில் திருச்சி வழக்கறிஞர் திராவிடர் கழகப் பிரமுகர் தெ. பொ. வேதாசலம் முதலில் பேசினார். அவருடைய பேச்சு முழுவதும் கடவுள் மறுப்பு. மத மறுப்பு தான்! பெரியார் நயமாகத் தன் கைத்தடியினால் தட்டிப் பார்த்தார். ஆனால், அவர் கவனிக்கவில்லை. அடுத்து நாம் தலைவர் பெரியாரைப் பாராட்டிப் பேசி, அவருக்குப் பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தினோம். முதலில் அரை மணி நேரம் பெரியாரின் அரிய தொண்டுகளைப் பாராட்டிப் பேசின. பிறகு, வேதாசலத்தின் பேச்சுக்கு மறுப்புரை சொன்னோம். ஏன்? நமக்குத் திராவிடர் கழகத் தினரின் மேடைகளில் முதல் மேடை இது! நமது நியாயமான மறுப்புரைகளுக்குத் திராவிடர் கழகத்தினரிடமும் வரவேற்பு இருந்தது. அடுத்து, தலைவர் பெரியார் பேசினார். பேச்சு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. "எனக்கென்ன கவலை! தமிழன் - சூத்திரன் என்று இழிவுபடுத்தப்படுகிறான். இந்த இழிவு கடவுளால் துடைக்கப்பட்டாலும் சரி, மகாசந்நிதானத்தால் துடைக்கப்பட்டாலும் சரி! எனக்கு அது ஒன்றுதான் குறிக்கோள்! சென்ற காலத்தில் எந்தக் கடவுளும் செய்யவில்லையே என்ற ஏமாற்றம் எங்களுக்கு இருப்பதை திராவிடர் கழகத்தினருக்கு இருப்பதை மகாசந்நிதானம் புரிந்துகொள்ள வேண்டும்? மகாசந்நிதானம் வருத்தப்படக் கூடாது. அவர் வாழ்த்தை நான் நம்புகிறேன். எனது தோழர்கள் நான் பக்தனாகி விட்டேன் என்று எண்ணக் கூடாது. மகாசந்நிதானம் நமது இனத்தின்மீது ஆர்வம் காட்டு கிறார்கள். குறிப்பாக என்மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துகிறார்கள். இந்த வாழ்த்து பலிக்கும்படியாகத் தொடர்ந்து