பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிறது. இந்து நாகரிகத்துக்கு அஹிம்சையைத் தந்ததே பெளத்தம்தான் என்றால் மிகையன்று. கயாவில் உள்ள புத்தவிஹாரில் தியானம் செய்ய எண்ணம். ஆனால், எண்ணம் கைகூடவில்லை ஏன்? பிச்சைக்காரர்கள் கூட்டம் ! அமைதியான சூழ்நிலை கிடைக்கவில்லை! தூய்மை இல்லை! -

கயாவில் வினோபாபாவேயைச் சந்தித்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சிரித்துக்கொண்டே "இரும்பு விலங்கு அரசு போடுவது; கால நிர்ணயப்படி கழற்றப்பெறும். தங்க விலங்கு நாமே போட்டுக்கொள்வது எளிதில் கழற்ற முடியாது” என்று கூறி, "விடுதலை ! விடுதலை!" என்றார். அடுத்துப் பல்வேறு சமூகப்பணிகள் பற்றிக் கலந்துரையாடினார். சரியாகக் காலை பத்து மணிக்குக் கூட்டம் தொடங்கியது. நாம் நமது உரையை ஆங்கிலத்தில் தயாரித்துக் கொண்டு போயிருந்தோம். யு. என். தேபர் மற்றும் ஆங்கிலம் தெரிந்த பலர் வந்திருந்தனர். ஆயினும், ஆங்கிலத்தில் யாரும் பேசவில்லை. இந்தியிலேயே பேசினர். நமக்கு ஆற்றொணாத் துயரம்! நாமும் வல்லடி வழக்காகத் தமிழில் பேசினோம். உடன் அழைத்துப் போயிருந்த சகோதரி திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நமது தமிழ்ப் பேச்சை இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். மீண்டும் வினோபாப்ாவேயிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பி விட்டோம். அந்தக்கூட்டத்தின் முடிவு, பூதான நிலங்களை நல்லவண்ணம் சாகுபடி செய்வது, பூதானத்தின் மூலம் ஏழைகளுக்குக் கிடைத்த நிலங்களைக் கைமாறாமல் பார்த்துக் கொள்வது முதலியவை.

தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பணி; விரைந்து செய்யும் பணி தொடங்கியது. ஆனால், நிலக்கொடை இயக்க நிலங்களின் பயன்பாட்டில் ஏற்பட்ட அனுபவம், ஏழைகளும் கூடத் தனி உடைமைகளில் காட்டும் ஆர்வம் கூட்டுடைமையில் காட்டுவதில்லை என்பதுதான்! பல தலைமுறைகளாகச்