பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனமும் தனித்து வாழ்ந்துவிட இயலாது. இன்று மனிதகுல ஒருமைப்பாடு என்பது கொள்கையல்ல. நாகரிகம் அல்ல. அறமும் அல்ல! இன்று மனித குல ஒருமைப்பாடு என்பது வாழும் முறைமை. மனித குலம் உயிர் வாழ இன்றியமையாதது. இந்த உணர்வால் உந்தப்பட்டு இலங்கை செல்வதை நாம் தவிர்த்தோம். அதற்குப் பிறகு, இலங்கையில் திரிகோண மலையில் உள்ள இளைஞர் அருள்நெறி மன்றத்தினர், தொண்டர் இ.சண்முகராசா தலைமையில் உண்ணாவிரதம் இருந்தும் கூட அழைக்க முயன்றனர். மறுப்பதே கடமையாகி விட்டது.

30

லங்கை அறநிலையத்துறை கொழும்பில் நடத்திய உலக இந்து மத மாநாட்டுக்கு நம்மை அழைத்தனர். நமக்கு உடன்பாடில்லை. வற்புறுத்தினர். ஒரளவு உடன்பட்டு நின்று, இலங்கையில் உள்ள ஆர்வலர்கள் கருத்தறிய ஐம்பது பேருக்குக் கடிதங்கள் எழுதப் பெற்றன. நாற்பத்தைந்து கடிதங்களுக்குப் பதில் வந்தது. ஐந்து கடிதங்கள் முகவரி மாற்றம் காரணமாகத் திரும்பி வந்தவிட்டன. ஒன்றிரண்டு கடிதங் களைத் தவிர, பல கடிதங்கள் இலங்கைக்கு வரும்படியே எழுதப் பெற்றிருந்தன. அவற்றுள் ஒரு கடிதத்தில் மட்டும் விரிவான ஆலோசனை இருந்தது. இதை எழுதியவர் 'இலங்கை காந்தி என்று பாராட்டப் பெறுபவரும், அகில இலங்கை காந்தி சேவா சங்கத் தலைவருமாகிய சி.சு. வேலாயுத பிள்ளை, இவர் ஒரு காந்தியத்தொண்டர். பிரம்மச்சாரி, சட்டை அணியாதவர். எப்போதும் கதர் உடுத்துபவர். அண்ணல் காந்தியடிகள் வழியில் நிர்மாணப் பணிகள் செய்து வருபவர், இவர், நாம் இலங்கைக்கு வருவதன் மூலம் நல்லிணக்கப் பேச்சு நடத்த வாய்ப்பிருக்கிறது என்று நம்பினார். அதற்காக வரவேற்றார். இலங்கையில் தமிழர்சிங்களர் நல்லிணக்கமின்மை ஒருபுறம் இருக்க, தமிழர்