பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

217


தந்தோம். திங்கள் சந்தையில் இடிபட்ட பிள்ளையார்கோயில் கிறிஸ்தவர்கள் சார்பில் ஆயர் செலவில் கட்டப்பெற்றது. பின் மூன்று சமயத்தாரும் சேர்ந்து ஊர் தோறும் ஊர்வலமாக (சாலைகளில் கார் பயணமாக அமைதிப் பயணம் சென்று ஒருவாறாக அமைதிப் பணி முடிந்தது. நாகர்கோவில் சுழற்குழு பாராட்டு செய்தது.

{குன்றக்குடிக்குப் பயணமாகும் முதல் நாள் இரவு கன்யாகுமரியில் அனைத்து சமயத்தினரும் ஒரு விருந்து கொடுத்தனர். அந்த விருத்தின்போது நடந்த கலந்துரையாடலில் பிறந்த இயக்கம்தான் 'திருவருட் பேரவை'. பேராயர் எம். ஆரோக்கியசாமி ஆலோசனையின் மீது தொடங்கப் பெற்றது. இன்று தமிழ்நாட்டில் திருவருட் பேரவை நாளும் வளர்ந்து வருகிறது. பாபர் மசூதி இடிப்பின்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் சந்தடியில்லாமல் அமைதியைக் காத்த பெருமை திருவருட்பேரவை இயக்கத்துக்கு உண்டு. குறிப்பாக மதுரை, தஞ்சை மாவட்ட அமைப்புகள் சிறப்பாகப் பணி செய்து மோதல்களைத் தவிர்த்திருக்கின்றன.

குமரி மாவட்ட அமைதிப் பணியின் போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், அமைதிப் பணியைப் பற்றி அடிக்கடி அக்கறையோடு கேட்டறிந்தார். ஏன்? நமக்குப்போதிய பாதுகாப்புக்கு காவலர்களை அனுப்பும்படி பணித்திருக்கிறார். நாம் வேண்டாம் என்று மறுத்து விட்டோம். இடையில் அமைதிப் பணி பற்றியும் எதிர்காலம் பற்றியும் தமிழக முதல்வரைச் சென்னையில் கண்டு கலந்து பேசினோம். பரிந்துரைகள் முழுதும் ஏற்கப் பெற்றன. மக்கள் நலத்தில் கெளரவப் பிரச்னையின்றி முதல்வர் எம்.ஜி.ஆர். காட்டிய ஆர்வம் என்றும் நினைவு கூரத்தக்கது.

அமைதிப்பணி நிறைவெய்திய நிலையில் மண்டைக் காடு பகவதியம்மனுக்குக் கடலில் மூழ்கித் தண்ணிர் எடுத்துச்