பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

227


உயர்ந்த இடம் பாராளுமன்றம்தான். பாராளுமன்றத்தின் மரபுகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார். நேருஜி போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்துக்குக் கொடுத்த பெருமை என்ன! உயர்வு என்ன! இன்று நாம் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் கொடுக்கும் மரியாதை என்ன? தொலைக்காட்சி எடுத்துக் காட்டலாமா. வேண்டாமா என்று ஆலோசிக்க வேண்டியுள்ள நமது நிலை இரங்கத் தக்கது:

1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி நேருஜி அமரரானார்.

நேருஜி நிலச் சீர்த்திருத்தச் சட்டம் செய்வதிலும் விவசாயிகளின் உரிமைகளைக் காப்பதிலும் ஆர்வம் பெரிதும் காட்டினார். எல்லா மாநில அரசுகளும் நிலச் சீர்த்திருத்தச் சட்டங்கள் இயற்றின. அரசியல் சட்டத்துக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் சொத்துரிமையும் ஒன்று. ஆனால், இந்திய உச்சநீதிமன்றம் நிலச் சீர்திருத்தச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது. உடனே அரசியல் சட்டத்தைத் திருத்த, பாராளுமன்றம் கூடியது. 17-வது திருத்தம் - பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சரின் கடுமையான வாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி காங்கிரஸுக்குப் பெரும்பான்மையிருந்தும் சட்டத்திருத்தம் தோற்றுவிட்டது. இந்தத் தோல்வி நேருஜிக்குக் கடுமையான பாதிப்பைத் தந்துவிட்டது. உடன் திரும்பவும் மறுவாக்குக் கொண்டுவர வேண்டும் என்று நேருஜி வற்புறுத்தினார். பாராளுமன்றத்தின் மறு ஆய்வுக்கு நாள் குறிப்பிட்டு அறிக்கை தரும்படி கூறிவிட்டு குளு பள்ளத்தாக்குக்கு ஓய்வெடுக்கப் போனார்.

ஓய்வெடுத்த பிறகு புதுடெல்லி திரும்பினார். அரசியல் சட்டம் 17-வது திருத்தம் நிறைவேற்றுவதற்காகப் பாராளுமன்றம் கூடுகிறது. இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்று வழக்கமான கடமைகளைச் செய்துவிட்டுப் படுத்தவர்