பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தாயும்-சீர்திருத்தவாதியும்

துன்பத்திலிருந்து இன்பமும், சோதனையிலிருந்து திறமையும் தோன்றுவது மரபு, அதனால்தான் துன்பத்தின் முடிவு இன்பம் என்று ஆன்றோர் கூறுகின்றனர்.

மகப்பேறு பெறும் தாய் ஒருத்தி, படுகிற துன்பம் மிக அதிகம். ஆனாலும் அந்தத் துன்பத்தைத் தொடர்ந்து இனிய மகிழ்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் தொடர்கிறது. அதுபோலவே, சமுதாயத்தில் ஒரு சீர்திருத்தம் செய்ய விரும்பி முயற்சிக்கின்ற போது, முதலில் நாம் அடைவது தோல்வியும் ஏமாற்றமும் இன்ன பிறவுமே ! ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் சமுதாயம் மாறி வளரத்தான் செய்யும். சில சமயங்களில்-மகப்பேற்றில் தாய் இறந்து விட்டாலும் குழந்தை வளர்ந்து சமுதாய வளர்ச்சி தொடர்வது போலச் சீர்த்திருத்தம் செய்ய முயற்சிக்கும் தலைவன் இறந்து போனாலும், அந்தத் தலைவனின் சீர்திருத்தக் குழந்தை வளர்ந்து, வாழ்ந்து சமுதாயத்திற்குப் பயன் தருவது உறுதி.

வெறும் பானையும்-குறிக்கோள் இலா மனிதர்களும்

சில தென்னை மரங்களைப் பார்த்திருப்பீர்கள்; மற்ற தென்னை மரங்களைப் போலவே அதுவும் வளர்ந்து, பாளை விட்டுக் காய்க்கும். காய், மற்ற தென்னை மரங்களில் காய்க்கும் காய்போலவே தோற்றமளிக்கும். ஆனால், அந்தக் காயை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளிடு இருக்காது. அதற்கு, 'வெறும்பாடை' என்று பெயர். அந்த மரமும் உரிய காலம்வரை வளர்ந்துதான் இருக்கும். தேங்காயின் தோற்றமும் மற்ற தேங்காயைப் போலவே இருக்கும். ஆனாலும் உடைத்துப் பார்க்கும் போது உள்ளீடு இருப்பதில்லை. அது வெறும் பாடையாக இருக்கிறது. இதைப் போலவே மனிதர்களிலும் பலர் உள்ளனர்.அவர்கள் பருவுடல் தோற்றத்தால்