பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

263



ஒவ்வொருவரும் ஒரு நாமத்தையே உறுதியாகக் கொள்ள வேண்டும்.

தேனாறும்-திருவருளும்

தேனிலோ உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவது போல, இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகி விடுவார்கள்.

சமூகமும்-சீன வெடிக்கட்டும்

சமூகம் என்பது ஒரு சீன வெடிக்கட்டுப் போன்றது; சீன வெடிக்கட்டில் ஓரிடத்தில் தீ வைத்தாலும் கட்டு முழுவதும் வெடிப்பது போல, சமூகத்தில் எங்கேனும் ஒரு மூலையில் தீமை பற்றினால் அது சமூகம் முழுவதையுமே பற்றத்தான் செய்யும்.

விவசாயமும்-சமயமும்

நிலத்தை உழுதல் வளப்படுத்துதல் பயிர் செய்தல் பயிர்களைப் பாதுகாத்தல் முதலான அனைத்துமே விவசாயத் தொழில்கள்தாம் என்பது போல, மனித குலத்திற்கு நல்லறிவு தருதல், நலத்தைப் பாதுகாத்தல், வறுமை, பிணி, பகை முதலியவற்றிலிருந்து பாதுகாத்தல் ஆகிய அனைத்துமே சமயத் தொண்டுகள்தாம்.

கழனியும் மக்களும்

கழனிகள் இல்லையேல் விளை பொருள்கள் இல்லாமற்போவது போல, மக்கள் மன்றம் இல்லையேல் சமயம் இல்லாமற் போகும்.

* * *
நமக்கு இருக்கிற நிலபுலன்களையும், சொத்துக் களையும் நாம் நமது வாரிசுகளுக்குப் பத்திரம் செய்து