பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

367


உள்ள உரத்தை விரைந்து பயிர்களுக்கு எடுத்துத் தரும் கிரியா ஊக்கிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

மண் வளத்திற்குப் பகை, மண்அரிப்பு. இந்த மண் அரிப்பு, விவசாயத் தொழிலைச் சீர்குலையச் செய்து, மனித குலத்துக்கே அழிவைத் தரும். ராஸ்டன் செப் என்ற விஞ்ஞானி மண் வளம் பற்றி ஆராய்ந்து புகழ்பெற்ற விஞ்ஞானி. ரோம் சாம்ராஜ்யத்தின் அழிவுக்குப் பயிர்த் தொழில் சீர்குலைந்ததும் ஒரு காரணம் என்று கூறி உள்ளார் அவர்.

மண்வளம் குறைதல் ஒரு நாட்டு மக்களின், வாழ்க்கை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும். மனிதரின் உடல் நலிவுக்கு ஊட்டச்சத்து இன்மை காரணம். ஊட்டச்சத்து தரும் உணவின்மைக்குக் காரணம் விவசாயச் சீர்குலைவு.

விளையும் நன்செய் - புன்செய் புலங்களையோ, பழத்தோட்டங்களையோ கால்நடைகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாற்றுவதும் அல்லது தாமே ஆகும்படி விட்டு விடுவதும் கூடாது. கால்நடைகளைக் கண்டபடி கட்டுப் பாடில்லாத வகையில் - குறிப்பாக ஆடுகளை மேய்க்கும் முறைகேடுகளால் மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் கெடும்.

இன்று தமிழ்நாட்டில் மேய்ச்சல் தரை என்பதே இல்லை. சில இடங்களில் புல்லே இல்லாத மந்தை வெளிகளை மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்துகின்றனர். ஊர்கள் தோறும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேய்ச்சல் தரையையும், கால்நடைத் தீவனத் தழைகளைத் தரும் மரங்களையும் வளர்த்தால்தான் நம்முடைய நிலத்தின் மண்வளத்தைக் காப்பாற்ற முடியும். வேளாண்மையிலான பொருளாதாரமும் செழிப்பாக இருக்க முடியும்.

காற்றினாலும் மண் அரிப்பு ஏற்படுவது உண்டு. அதாவது காற்றினால் மண் பறந்து போய்விடுதலாகும். இதனைத் தடுக்கப் புலங்களின் எல்லையில் - வேலிகளில்