பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


பிரார்த்திக்க வேண்டும் என்பதாகவும் அடிகளார் சிந்தித்திருக்கிறார்.

வயிறு புடைக்க உண்டபிறகு, உண்டது போதுமா? என்று கேட்டு, மனம் திருப்தி காணுகிற வரை உண்ண விழைகிற அவர்கள், உழைப்பிலே மட்டும் அத்தகைய திருப்தியைக் காண முற்படாமல், தொழில் செய்வதாக, வெறும் பாவனை மட்டுமே புரிவது ஏன்? எனக் கேட்கிறார் அடிகளார்.

உழைக்காதவர்கள், தம் பாவம்தீர, ஆண்டவனைப் பிரார்த்திக்க வேண்டிய பிரார்த்தனைகளையும் இந்நூலில் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோயிலைப் பற்றிய திருவருட் சிந்தனைகள் பலவும் இந்நூலில் வெளியிடப் பட்டிருக்கின்றன. "திருக் கோயில்க்ள் உயிரனுபவத்திற்குரிய பண்ணைகள்” என்பதாகப் போற்றியுள்ள அடிகளார், திருக்கோயிலின் துய்மைப் பராமரிப்பைப் பல பிரார்த்தனைகளில் வற்புறுத்தியுள்ளார்.

"இறைவா! மன்னித்துவிடு! இனிமேல் நீ எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றேன்" என்று அன்பர்கள், பிரார்த்திப்பதாக சிந்தனை செய்து அவர்கள் அப்பர் பெருமான் திருநாவுக்கரசரைப் போல் உழவாரப் பணி புரியவும், கைத் திருத் தொண்டு செய் கடப்பாட்டில் நிற்கவும், உறுதி கொள்வதாகப் பிணைத்துள்ளார்.

உழவாரப் பணியை! சிறிய பணி என்று சிலர் ஏளனம் செய்யக்கூடும் என்று எண்ணி அடிகளார். அது சீரிய பணி ஆவதையும்! "தெருக்களைக் கூட்டித் துப்பரவு செய்யும் தொழிலும் கூட! அதன் தன்மையில், மிக மிக உயர்ந்த தொழில்” என்று விளக்குகிறார்.

துப்பரவு பணி கோடானு கோடி மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் தொழில். அதனால் அன்றோ