பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். அந்த அளவுக்குத் தீவிரமாய்ப் போய்க் கொண்டிருந்தது. சில உயர் தலைவர்கள் அடங்கிய ஜஸ்டிஸ் கட்சியும் நாங்களும் ஈரோட்டில் சந்தித்துப் பேசுவதாய் ஏற்பாடானது. அந்தச் சந்திப்பில்தான் ஒரளவு எங்களுக்குள் இணக்கம் ஏற்பட்டது.

பெரியாரை எனக்கு இன்னமும் பிரியமானவராய்ச் செய்தது ஒரு நிகழ்ச்சி. திருச்சியில் ஜீவாவின் மகள் கல்யாணம் ஏற்பாடாகியிருந்தது. ஜீவா பெரியாருக்கும் வேண்டியவர், எனக்கும் வேண்டியவர். நானும் பெரியாரும் தான் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் ஏற்பாடு செய்து வைத்தோம். பெரியார் மாளிகையில்தான் கல்யாணம் வைத்திருந்தோம். நான், பெரியார், அப்போது முதலமைச்சராய் இருந்த அறிஞர் அண்ணா எல்லோரும் கல்யாணத்துக்குப் போயிருந்தோம்.

பெரியாரின் சீடர்கள் கறுப்புக் கொடியை, கையில் வைத்துக்கொண்டு, "கடவுள் இல்லை. கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன், கடவுளை நம்புகிறவன் காட்டு மிராண்டி,” என்பது போன்ற வாசகங்களையெல்லாம் எழுதிக்கொண்டு வந்திருந்தார்கள்.

பெரியார் எப்போதும் என்னைச் சந்நிதானம் என்றுதான் அழைப்பார். தன் சீடர்களைக் கூப்பிட்டு, "டேய் சந்நிதானம் வந்திருக்காருடா. இங்கே எதுக்குக் கறுப்புக் கொடியும் இன்னொன்றும்?" என்று அதட்டுப்போட்டு அடக்கிவிட்டார். கறுப்புக்கொடி வேண்டாம் என்று சொன்னதோடு நில்லாமல் எல்லாவற்றையும் எடுத்து உள்ளே போட்டுவிட்டார். அந்த அளவுக்கு அவர் மனிதர்களின் மனங்களை மதித்தவர்.

கலைஞர் கருணாநிதி:

தென்னரசு ஒரு முறை, "அடிகளார் தி.மு.க. ஆதரவாளர் அல்ல" என்று கலைஞரிடம் கூறினார். கலைஞர்,