பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

53


"அடிகளார். அவர்களிடம் நாம் காட்டும் மரியாதை தி.மு.க. என்பதற்காக அல்ல. அடிகளார். தமிழார்வலர். சமூக நெறியாளர் என்பதற்காகத்தான்", என்று பதில் கூறினார்.

எம்.ஜி.ஆர்:

ண்டைக்காடு கலவரத்தின்போது, முதலமைச்சர் என்ற முறையில் சமாதானம் செய்து வைக்க எம்.ஜி.ஆர். சென்றார். நிலைமையைக் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. திரும்பி விட்டார். பிறகு நான் சென்றேன். ஒரு மாதத்துக்குக் கிட்டத்தட்டத் தங்கிச் சமாதானம் செய்து வைத்துவிட்டுக் கிளம்பி வந்தேன். அதை, வெளிப்படையாய், சட்டசபையிலேயே மனம் திறந்து பாராட்டினார். "அடிகளார் சமாதான முயற்சிகளை நல்ல முறையில் செய்தார். ஒரு மடாதிபதி என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று என்னை ஓர் எடுத்துக்காட்டு போலப் பேசினார்.

நேரு:

டெல்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழா அது. நேரு தொடங்கி வைத்தார். நான் தலைமை தாங்கினேன். அதன்பிறகு நம் மாவட்டத்துக்கு ஒரு முறை வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். பள்ளிக்கூட விழாவுக்கு வந்திருந்தார். பொதுவாகவே பொலிட்டிகல் எகானமி விஷயத்தில் அவரைத்தான் நான் மிகவும் அட்மயர் செய்வேன். லெனின், மார்க்ஸ், விவேகானந்தர், திருவள்ளுவர், அப்பர் சுவாமிகள் இவர்களுக்கு அடுத்தபடி எனக்கு நேருதான் வழிகாட்டி.

என் குரு சுவாமி விபுலானந்தர்

வர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புரொபசராய் இருந்தார். அவர் வீட்டுக்கு அடிக்கடி