பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போவேன். அப்போது நான் சின்னப் பையன். அவருக்கு நிறையப் பணிவிடைகள் எல்லாம் செய்வேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் சேரிக்குப் போவார். கொஞ்சம் பொட்டுக்கடலையும் சர்க்கரையும் மடித்து எடுத்துக் கொள்வோம். அங்கே போய்ப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார். பிறகு அந்தப் பொட்டுக்கடலை சர்க்கரையை விநியோகம் செய்வார். பிறகு வீட்டுக்கு நடந்து வருவோம். அப்போது அவருக்குப் பாதை தெரிவதற்காக நான் அரிக்கேன் லைட் எடுத்துக் கொண்டு வருவேன். சுவாமி விபுலானந்தா எங்கே போனாலும் அவருடன் நானும் போவேன். இப்படியெல்லாம் பழக்கம் நெருக்கமானது. கடைசியில் அவர் யாழ்ப்பாணத்துக்குப் போகிறேன் என்று கிளம்பியபோது எனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கத்தின் காரண மாய்ப் பிரிவு தாங்க முடியாமல் நானும் வருகிறேன் என்று கத்தினேன். இந்தச் சின்னப் பயலைக் கூட்டிப்போய் என்ன செய்வது என்று நினைத்திருப்பார் போலும். நான் துங்கிக் கொண்டிருந்த நேரமாய்ப் பார்த்துக் கிளம்பிப் போய் விட்டார். இத்தனைக்கும் அவருடன் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டிலேயே போய்ப் படுத்துக் கொண் டிருந்தேன்!

1992–ல் வறுமையின்
குரல் வளையைப் பிடித்துவிடுவேனா?

நtiம் அண்மையில் படித்த, படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் ஸ்காண்டிநேவியாவின் சமூகவியல் பேராசிரியர்கள் கோரான் ஜூர்ஃபெல்ட் - ஸ்டஃபான் லிண்டர்பர்க் ஆகியோர் எழுதிய 'வறுமையின் பின்னணி' என்ற புத்தகம். இந்தப் புத்தகம் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தையூர் என்ற கிராமம் பற்றிய ஆய்வு. கிராமத்தில் வறுமை