பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

55


எப்படித் தோன்றுகிறது, வளர்கிறது, சமுதாய வளர்ச்சிப் பணிகளையும் தாண்டி எப்படிக் கிராமங்களில் வறுமை நிலைபெறுகிறது என்பதை விளக்கும் புத்தகம். இந்தப் புத்தகம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற வறுமை நீக்கப் பணியை மேலும் ஆழமாகச் செய்யவேண்டும் என்ற உணர்வைத் தந்துள்ளது.

அரசாங்கத்தின் விலைவாசிக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை சரியாக இல்லாததால் நம்முடைய வாழ்க்கைத் தரம் மனநிறைவாய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதனால் 91-92 இல் என்னுடைய பயணங்களைக் குறைத்து எங்கள் கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக்கி, எந்தப் பண்டமுமே வெளியில் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது என் ஆசை, விலைவாசி உயர்வினால் எங்கள் கிராமம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் வறுமையின் குரல் வளையை நெறிக்க முடியும். இல்லை யென்றால் என்னாகும்?

இன்றைக்குக் கிலோ அரிசி ஆறு ரூபாய் விற்கிறது. நகர்ப்புறத்தில் பணப் புழக்கம் இருப்பதுபோல் இன்று கிராமப்புறத்தில் புழக்கமும் கிடையாது.

இந்த நிலையில், அப்படி ஒருவன் தன் நிதி நிலைமைக்குள் தனது தேவைகளைக் கவனிக்க முடியாத நிலைமை ஏற்படுமானால், கிராமத்துக்கென்று ஒரு பொது நிதியை உருவாக்கவேண்டும். அந்த நிதியிலிருந்து அவனுடைய தேவைகள் கவனிக்கப்பட வேண்டும்.

எங்கள் கிராமக் குழந்தைகளுக்குச் சத்துணவு சரியானபடி கிடைக்கவில்லை. ஒரு குழந்தைக்குப் பத்துக்காசுதான் கொடுக்கிறார்கள். ஒரு கத்தரிக்காய்கூடக் கிடைக்காது அந்தத் தொகைக்கு