பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

57


மதில் மேல் ஏறி உபதேசம் செய்த திருக்கோஷ்டியூரையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, என் பணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடங்கிவிடப் போவதில்லை. இனிமேல் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேச்சுக்கு இரண்டாம் இடம் கொடுப்பது என்று தீர்மானித்திருக்கிறேன்.

பொங்கல் நாள்

நாங்கள் எங்கள் பண்ணையில் பொங்கல் கொண்டாடுவதைப் பார்க்கவே மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும். பெரிய திடலில் பொதுப் பொங்கல் போடுவோம். அன்று சிறந்த விவசாயிகளுக்குப் பரிசு கொடுப்போம். இதற்காகவே ஒரு தேர்வுக் கமிட்டி உள்ளது. கதிர் விடும் சமயத்திலே கமிட்டி போட்டு விட்டோமென்றால், அவர்கள் கதிரை எடுத்து நெல்மணிகளை எண்ணி, எந்த விவசாயியின் கதிரில் அதிக நெல்மணிகள் இருக்கின்றனவோ, அவர் களுக்குப் பரிசு என்று அறிவிப்பார்கள்.

பொங்கல் தினமாதலால் எல்லோருக்கும் பிரசாதம், திருநீறு எல்லாம் கொடுப்பேன்.

காலணா கொடுத்தால் திருக்குறள்

திரு. பரமகுரு

சின்ன வயதில், அடிகளாரின் பூர்வாசிரம அண்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டி ருந்தார். அப்போது அடிகளார் அங்கு இருந்த புரொபசர் களுக்குப் பால் கொண்டு போவாராம். விபுலானந்தர், ரா.பி. சேதுப்பிள்ளை இவர்கள் அந்த வரிசையில் இருந்தவர்கள்.


கு.XVI.5.