பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

59


ரிசர்ச் சென்ட்டர் எனப்படும் சிக்ரியின் உறவு கிடைத்தது. அந்த விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் கிராமத் திட்டக்குழு ஒன்றை அமைத்தார்கள். யோசனைகளை அவர்களிடமும், நிதியுதவிக்கு பாங்கையும் அணுகினார் அடிகளார். திட்டங்களுக்கு அரசின் உதவியை நாடினார்.

அப்போதுதான் கூட்டுறவு நிதி நிலைமையில் மேம்பாடு எல்லாம் ஏற்பட்டது. கிராமத்து விவசாயிகளுக்கு வருமானம் மேம்பட்டது. பிளாஸ்டிக் தொழிற்சாலை, முந்திரிக் கொட்டையின் ஓட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை, கார் பாட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலை ஆகியவை ஏற்பட்டன. கடைசி இரண்டு ஐட்டங்களும் ஹைடெக்னாலஜி. அதுகூடக் கிராமத்தை எட்டியதற்குச் சாமிதான் காரணம்.

படித்தவர்களுக்கு, படிக்காதவர்களுக்கு, பெண்களுக்கு எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கிற மாதிரி செய்து விட்டார். எதுவுமே செய்ய லாயக்கில்லாதவர்களுக்குக் கூடக் கல் உடைக்கும் தொழில்!

எங்கள் கிராமத்து இளைஞர்கள் நன்கு படித்து, பொறியியல் போன்ற துறைகளில் மேற்கொண்டு படிக்க விரும்பினால் சாமியே சீட் வாங்கித் தருவார்.

இங்கு 544 குடும்பங்கள் உள்ளன. அனைத்திலும் உள்ள ஒவ்வொருவரையும் சாமி தனித்தனியாய் நன்கு அறிவார் குழந்தைகளைக்கூட நன்றாய்த் தெரியும்.

டாக்டர் கே. பாலகிருஷ்ணன் (சிக்ரி சேர்மன்):

1976 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் எங்களை இந்த ஊரில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். முன்பு பாலித்தின் பைகள் வாங்கி ஒட்டுவது மட்டும் செய்து கொண்டிருந்தார்கள். 1976இல் சிக்ரி இந்த ஊரைத் தத்து எடுத்துக்கொண்ட பிறகு,