பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இதழ்களும் புத்தகங்களும் வாங்கித் தந்தவர், தமிழ்நாட்டின் தலைசிறந்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, வாசகசாலை நடத்துவதற்கு மட்டுமல்ல.... வாசகசாலை உறுப்பினர்களைக் கவிதைகள் எழுதவும், மேடைகளில் பேசவும் பயிற்றுவித்தார் அழ வள்ளியப்பா. வாசகசாலையில் படித்தவர்களில் ஒருவர் எஸ்.சுந்தரேசன் என்ற அன்பர். இவர் நம்மோடு பயின்றவர். பின் பட்டதாரியாகி ரயில்வேயில் பணிக்குச் சேர்ந்து பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார். பொன்மலையில் தங்கியுள்ளார். இவருடன் இன்றும் தொடர்பு இருக்கிறது. நமக்குக் கணக்குப் பாடம் எமன்! சுந்தரேசன்தான் சொல்லிக் கொடுப்பார். திருவேங்கடம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் எப்போதும் திருமண் சாத்திய நெற்றியுடன் விளங்குவார். இவரும் ரயில்வேயில்தான் பணி செய்தார். எஸ்.பி. சேது என்பவர் மின் வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார். ஏன்? நாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தி ஐயர் எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார். ராமகிருஷ்ணா மடத்தின் அப்போதைய ‘பிரபுத்தபாரதா' என்ற ஆங்கில இதழும் வாங்கிக் கொடுத்தார். ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி வாங்கிக் கொடுத்தார். இங்ஙன மெல்லாம் வாசகசாலைப் பணி நடந்தது. அன்றாடம் வாசக சாலையைத் திறப்பது, மூடுவது. சுத்தமாக வைத்திருப்பது ‘சுட்டி' என்று எங்களால் ஆசையுடன் அழைக்கப் பெற்ற திருமலை என்பவருடைய கடமை. நமது கல்வியில் ஆர்வம் காட்டி வீட்டிலும் படிக்கத் தூண்டியது ஒரு ஆசிரியர் குடும்பம்! பக்கத்து வீடு-மலையப்ப ஐயர். வீடு! இந்த வீட்டில் நமக்குப் பசி நேரத்தில் - உணவும் கிடைக்கும்; கல்வியும் கிடைக்கும். யக்ஞேஸ்வர ஐயர், இவர் ஓர் இடைநிலை ஆசிரியர், ஆயினும் ஆங்கிலம் நன்றாகக் கற்பிப்பார். யக்ஞேஸ்வர ஐயர் ஓய்வு பெற்று புதுக்கோட்டையில் தங்கியுள்ளார். யக்ஞேஸ்வர ஐயரின் தம்பி - அம்பி இவர் உடல்நல மில்லாதவர். அவர்