பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

75


பிறிதொரு காரணம்! நாம்தான் தண்ணீர் எடுத்து வருவது. ஒரு நாள் மாலை அந்திப் பொழுதில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது அந்த வீட்டுக்காரர், “விளக்கேற்றி வைத்த பிறகு. தண்ணீர் எடுக்க வரக்கூடாது" என்றார். அவர் சொன்னதில் தவறில்லை! ஆயினும் நமக்கு 'ரோஷம்' பொத்துக் கொண்டு வந்தது! மறுநாளே தோட்டத்துக் கேணியைப் பழுது பார்க்கும் பணி நடந்தது!

ஆனால், யாரும் குளத்தங்கரையில் எங்கிருந்து நாற்றம் 'வருகிறது! ஏன் நாறுகிறது! நாற்றத்தை அகற்றித் தூய்மை செய்ய முடியுமா? என்றெல்லாம் சிந்திக்க முன்வரவில்லை. அவ்வளவுகூட சமூகச் சிந்தனை அந்தக் கிராமத்தில் யாருக்கும் வரவில்லை! பொதுநலத்தில் சிரத்தையில்லாத காலம்!

நாங்கள் சிறுவர்கள்! நம் நண்பர்கள் கோவிந்தராஜன், ராமானுஜன் என்பவர்கள் கூடினோம். இவர்களில் நமது மூளைதான் வேலை செய்தது! ஆனால், சுத்தம் செய்யும் வேலைக்குப் பொறுப்பேற்று தைரியமாகச் செய்தவர் கோவிந்தராஜன்தான். இப்போது இவர் இல்லை, இப்போது நமது சென்னை அலுவலகத்தில் பணி செய்யும் வைத்திய நாதன் இவருடைய மகன்தான்!

குளத்தங்கரை நாற்றத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். நாற்றம் எங்களைக் குளத்தங்கரையில் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றது. அது தனியார் கோயில். ஆனாலும், பூஜை இல்லை. தர்மம் வளரும் நிலை இது. சொல்ல என்ன வெட்கம்? இது எங்கள் குடும்பத்தின் திருக்கோயில், இக்கோயிலுக்கு ஒரு வேலி நிலம் சொத்து உண்டு. குடும்பத்தில் மூத்த வாரிசு நிர்வாகம் செய்ய வேண்டும். எங்கள் பெரிய தந்தையார் நிர்வாகம்! பிள்ளையாரை அவர் கவனிக்க வில்லை! திருக்கோயிலை நெருங்கினோம். நெருங்க நெருங்க நாற்றத்தின் வீச்சு அதிகமானது; குமட்டல் வந்தது! வேறு