பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

241


என்ற அடிப்படையை எடுத்துக் கொள்ளவில்லை திருவள்ளுவர். சொற்களின் ஒழுக்கத் தகுதியை ஆராய்வதற்கு அந்தச் சொற்களால் விளையும் பயனையே உரைகல்லாகக் கொள்கிறார். வாழ்க்கை சிறப்பதற்குத்தானே ஒழுக்கம்? அங்ங்னம் சிறக்கச் செய்யமுடியாத - பயனற்ற நிகழ்ந்தவற்றைக் கூறி அல்லற்படுவதில் பயனென்ன?

ஆதலால், நிகழ்ந்தது கூறல் வாய்மையன்று. நிகழ்ந்ததைக் கூறலாம், நன்மை பயக்குமாயின் நிகழ்ந்தது கூறல், தீமை விளைக்குமாயின், கூறியது பொய்யேயாம் என்பது வள்ளுவத்தின் தெளிவான ஒழுக்கம். நிகழாதது அல்லது பொய் கூறுவதும்கூட, அதனால் நன்மை விளையுமாயின், வாய்மை என்றே கொள்ளப்பெறும்.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்


என்பது குறள்.

சாக்ரடீசும் "நன்மைகளைச் சாதிக்க மருந்து போலப் பொய் கூறலாம்" என்றார். இங்ஙனம் பொய்ம்மையும் வாய்மையாதல் பெரும்பாலும் சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் அடிக்கடி நிகழும். இங்ஙனம் நிகழ்வதன் இன்றியமையாமை பழகுபவர்களிடத்திலுள்ள மனவலிஉணர்வு ஆகியவற்றைப் பொறுத்து அமைவதாகும். இதனை,


நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

என்ற குறள் விளக்குகிறது. சிலருக்கு நல்லதை அப்படியே நல்லதாக எடுத்துக் கொள்ளும் சக்தியில்லை. அவர்களுக்குக் கவர்ச்சி தேவை; இனிய பூச்சு தேவை. எப்பொழுதும் முறையான நன்மை கவர்ச்சியாகக் காட்சி அளிக்காது. ஆனால் நெடிய- ஆழமான - மாறாத நல்லின்பத்தை நல்கும். இத்தகு நல்லின்பத்திற்கு அழைத்துச் செல்லப் பொய்ம்-

தி .II. 16