பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

51



கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்று மனித குலம் வாழ்க்கை மாளிகையைக் கட்டுதற்குரிய வழியைக் காட்டுகின்றார்.

தொட்டனைத் துரறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் துரறும் அறிவு.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கல்விக்குரிய நூல்கள்

வாழ்க்கைக்கு உண்ணுதல் அளவுக்குக் கற்றல் இன்றியமையாத கடமை. இல்லை, உண்ணலினும் சிறந்தது கற்றல். உண்ணல் உடலை வளர்க்கிறது; உயிர் வாழ்க்கைக்குத் துணை செய்கிறது. கற்றல் உயிர்க்கு ஊட்டம் தருகிறது; உடல் நலம் பேணுவதற்கும் துணை செய்கிறது. உணவை ஒரோவழி மருந்தென்பாரும் உண்டு.

ஆனால், கல்வி, உயிரின் அறியாமையை நீக்கும் அருமருந்து. சிறந்த நூலகள் தொகுக்கப் பெற்ற நூலகத்திற்கு 'உயிர் மருந்தகம்' என்று ஆன்றோர் வழக்கு உண்டு. ஆதலால், உயிர்க்குறை நீங்கி நிறைநலம் பெற்று வாழ விரும்புவோர் நல்ல நூல்களைத் தேடிக் கற்க வேண்டும்.

நல்ல நூல்கள்...! என்ன இலக்கணம். நத்தையிலிருந்து முத்து பிறக்கலாம். சேற்றில் செந்தாமரை தோன்றலாம். ஆனால், நல்ல நூல்கள் நல்ல மனிதர்களிடத்தில்தான் தோன்றும்.

சிந்தனையில், சீலத்தில் சிறந்தவர்களாலேதான் நல்ல நூல்களைத் தோற்றுவிக்க முடியும். நல்ல நூலாசிரியன்