பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



327


30. அரசுக்குப் பரிந்துரை

இனிய செல்வ!

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்று திருவள்ளுவர் கூறியதற்கு இணங்கத் தமிழ் நாட்டு மக்கள் கலைஞரிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். மகிழ்ச்சிக்குரிய முடிவு; பாராட்டுதலுக்குரிய முடிவு. முதலமைச்சர் மாண்புமிகு கலைஞரை வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் வரவேற்றுள்ளார். மாண்புமிகு கலைஞர் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி, வள்ளுவர் வழி நிகழும் ஆட்சியாக அமையும்.

இனிய செல்வ, இன்றுள்ள சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதைவிடக் கடினம், தமிழ் நாட்டை ஆளுவது! ஏன் என்றா கேட்கிறாய்? சொல்லுகிறோம் கேள். முதலில் நிதி நெருக்கடி இருக்கிறது. அடுத்து, தொடர் வறட்சியால் களஞ்சியத்தில் இருப்பு இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் வேறு! இவற்றையெல்லாம் விடப் பெரிய சிக்கல் நம்மனோருடைய மனோபாவம்! இத்தகு சூழ்நிலையில் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார். கலைஞருடைய ஆட்சி முழு வெற்றி பெற ‘வள்ளுவர் வழி’ துணை செய்யும். நாம் அனைவரும் அரசின் பணிகளுக்கு உறுதுணையாக அமைய வேண்டும்.

திருவள்ளுவர் "இதனை" என்று எதனைக் கூறினார்? அது ஒன்றா? பலவா? ஒன்றல்ல. பலப்பல! ஆயினும் ஒன்றிரண்டைப் பட்டியலிட்டு ஆய்வு செய்வோம்.

முதலில் நிதி நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வது. முதலமைச்சர் சத்துணவு மையத்திற்குப் பெரும்பணம் செலவாகிறது. இந்த முதலமைச்சர் சத்துணவு மையத்தை ஆங்காங்கு நடைபெறும் லாபகரமான தொழிற்சாலைகளிடம் ஒப்படைக்கலாம். அத்தொழிற்சாலைகளின்