பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



503


செல்வ, மனித குலத்திற்கு நிலையான தீர்வு வேண்டுதல் - வேண்டாமை அற்ற மனித சமூகத்தைக் காண்பதிலேயே இருக்கிறது.

இன்று உலகப் போக்கினைப் பார்த்தால் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது. அணு ஆயுத உற்பத்தியைக் குறைத்திருக்கிறார்கள். செய்து குவித்த அணு ஆயுதங்களைக் கடலில் கொட்டியிருக்கிறார்கள். ஆனாலும் உலகின் வீதிகளில் என்ன நடக்கின்றது? நமது நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது? இது ‘வீரப்பன்’களின் ராஜ்யமாக வல்லவா உருப்பெற்றுக் கொண்டு வருகிறது. இங்கே ஒரு வீரப்பன் என்று நினைக்காதீர்கள்! தெருவுதோறும் ஊர்தோறும் ‘வீரப்பன்’கள் தோன்றுகிறார்கள்! தோன்றிக் கொண்டிருக்கிறார்கள்! ஆயினும் என்ன செய்வது? திசை தவறிப் போய்க் கொண்டிருக்கிற சமுதாயத்தை வள்ளுவர் வழியில் மடை மாற்ற செய்ய இயலும், கடின முயற்சி தேவை. வெற்றி தோல்வியைப் பற்றிக் கருதாமல் போராடிப் பார்ப்போம். மனிதகுல வரலாறு தனது தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளட்டும்! வரலாறு தேக்கமின்றி நடைபோடப் புவியை நடத்துவோம்! காலம் விடை சொல்லும்! அடுத்த மடலில் எழுதுகின்றோம்!

இன்ப அன்பு
அடிகளார்
93. கல்விமொழியும்-தமிழ்ப்பணியும்

இனிய செல்வ,

1-1-95 முதல் 5-1-95 முடிய உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. மாநாட்டில் தமிழகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்த நற்செய்தி நான்காம் தமிழ் பற்றியது. அதுதான் அறிவியல் தமிழ்! மாண்பமை முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. இனிய செல்வ, தமிழ் பயிற்று மொழிக் கல்வி இயக்கம் 1962-லிருந்து நடந்து வருகிறது, தொடக்க காலத்தில் கோவை டாக்டர் மு.அறம்,