பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



511


வன்கண்குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு

(632)

என்ற அமைச்சுப் பணியைப் பாராட்டுகின்றார். மேலும் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ வேண்டும் என்றும் கூறுகின்றார். இந்த அமைச்சுப் பணிக்கு ஆள்பவரின் மனைவி தகுதியுடையவளாக இருப்பின் அவளுடைய ஆலோசனையைக் கேட்பதைத் திருக்குறள் மறுக்கவில்லை. மாறாக அவர் மனைவி-காமத்திற்குரியளேயன்றி வேறு எந்தத் தகுதியும் இல்லை. அந்த நிலையில் அரசியல் பற்றிய ஆலோசனைகளை மனைவி சொல்லக்கேட்பது ஆள்பவருக்கு ஏற்றதல்ல என்ற கருத்தே பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து ‘வரைவின் மகளிர்’ அதிகாரம். பல்லாண்டுகளாகத் திருமணமாகாத பெண்கள் அக்காலத்தில் வாழ்ந்துள்ளனர். ஏன்? இன்றும் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் இரண்டாக இருக்கக்கூடும். ஒன்று பெண்கள் எண்ணிக்கையில் கூடுதலாதல் அல்லது வசதிக்குறைவாதல் ஆகலாம். வரைவின் மகளிர் புழக்கம் அதிகமான காலம் பெரும்பாலும் பிரபுத்துவ காலமாக இருக்கலாம். அதாவது தனியுடைமைச் சொத்துரிமை வந்துவிட்டது. தன்னுடைய குழந்தைக்கு அல்லாமல் வேறு ஒருவருக்குச் சொத்து போய்விடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகவே வரலாற்றுப் போக்கில் பலதாரத் திருமணம் நின்றது. பலதாரத் திருமணம் நின்றபிறகு தன் மனைவி புணர்ச்சிக்குத் தகுதியில்லாத காலங்களில் வேறுபெண்களைத் தேடும் நிலையில் வரைவின் மகளிர் குலம் தோன்றுகிறது. இனிய செல்வ, இந்த ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்க இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணந்து கொள்ளும் உரிமையைத் தனது மக்களுக்கு வழங்கியது. சோவியத் ஒன்றியம் திருமணம் ஆகாத தாய்மார்கள் என்று அங்கீகாரம் செய்தது. இனிய செல்வ, நமது சமய சமுதாய