பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இந்த மனம் எங்கிருக்கிறது. எந்த நோக்கத்தில் செயல்படுகிறது என்பதுதான் முக்கியம். எனவே வினை என்பதற்குச் செயல் என்ற பொருள் எடுத்துக் கொண்டு, அது இருள் சார்புடையதாக இருக்கின்றதா? ஒளிச் சார்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இரண்டு வினையும் அப்படித்தான். திருவள்ளுவர்தான் முதன் முதலில் உலகத்தில் ஒரு புதுநெறி வகுக்கிறார்.

‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை’

76

என்றார். ஒரு தவறுக்குக் கூட, ஒறுத்தலுக்குக் கூட அறம் துணை செய்யும்; அன்பு துணை செய்யும். மருத்துவர் ஒருவரை அறுத்துச் சுடுகிறார். ‘வாளால் அறுத்துச் சுடினும் மாளாத காதல்’ வைத்தியரிடத்திலே. நம்முடைய உடல் நோய்வாய்ப்பட்டிருக்கிற போது ஓர் அறுவை வைத்தியர், அறுத்து வைத்தியம் செய்கிறார். அவரிடத்திலே காதல் வருமா? வெறுப்பு வருமா? ஆகவே நம் நாட்டினுடைய நாகரிகத்தின்படி - பண்பாட்டின்படி, தண்டித்துக் கண்டித்துத் திருத்துவதும் நல்லது. அது அன்பினால் செய்யப்படுகின்ற காரியம். இந்த அடிப்படையிலே செயலை வைத்து நன்மையா, தீமையா என்று முடிவெடுக்கக் கூடாது. அதனுடைய விளைவு என்ன? பயன் என்ன? சில பேர் நல்வினை செய்யலாம்; தீவினை செய்யக் கூடாது என்பார்கள். நல்வினை செய்யலாம். செய்கின்ற பொழுது கூட, தனக்காக என்று செய்தால் அது பொன்விலங்கு.

நான் நல்வினை செய்தால் கூட, அது நான் செய்கிறேன் என்று செய்தால் நமக்குப் பயன் கருதிச் செய்தால், அந்தக் கணக்குப்படி இலாபம் நமக்குத்தான். தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தால் தெரியும். தஞ்சைப் பெருவுடையார் கோயில் யார் கட்டினார் என்பது,