பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



235


போக ஆரம்பிக்கிறார்; மனிதன் பின்னால் போகிறான். கீழே ‘அ'வுக்கு இருந்த வளைவு மேலே வராது. அது நேராக இருக்கும். நேராக இருப்பது மட்டும் மல்ல; வளைவுகளைக் கடந்து ஒரு நேர்க்கோட்டில் போய் முடிகிறது.

வாழ்க்கையில் அடிக்கடி எல்லாரும் சொல்வார்கள். ‘நேர்மையாக இரு; நேர்மையாக இரு’ என்பார்கள். நேர்மை என்றால் என்னவென்று நிறையப் பேருக்குப் பொருள் சொல்லத் தெரியாது. ‘நேர்மை, நேர்மை’ என்பார்கள். நேர்மை என்றால் வேறொன்னும் இல்லை. இரண்டு புள்ளிகளை இணைக்கிற நேர்கோட்டைப் போல, ஒருவருடைய நலம், இன்னொருவருடைய நலத்தையும் இணைக்குமானால் அதற்கு நேர்மை என்று பொருள். எனக்கு நலமாக இருப்பதெல்லாம் இன்னொருவருக்கும் நலமாக இருக்க வேண்டும். எனக்கு மட்டும் நலமாக இருந்து அஃது இன்னொருவருக்கு நலமாக இல்லையென்றால் அது குறையுடைய நலம் நேர்மையுமல்ல; நீதியுமல்ல. ஆக இரண்டு புள்ளிகளை இணைக்கின்ற நேர்கோட்டைப் போல உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் இருக்கின்ற நலனையும், என்னுடைய நலனையும் ஒத்ததாக அமைக்கின்ற ஓர் இணைப்பு, ஒரு சூழ்நிலை, ஒரு சிந்தனைப் போக்கு இருக்குமானால் அதற்கு நேர்மை என்று பெயர். அந்த நேர்மை வாழ்க்கையில் வருகிறபொழுதுதான், கடவுள் நமக்கு அருள் செய்வார். உயர்ந்த சமய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொன்னால் பொருள், முதலில் மற்றவர்களின் நலன் தனக்கு உகந்ததாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

எங்கே தன்னலம் இருக்கிறதோ, எங்கே பொது நலனுக்கு விரோதமான தன்னலம் இருக்கிறதோ எங்கே மற்றவர்களுக்குக் கேடு செய்தும், தனக்கு நன்மை செய்தும் கொள்ளுகின்ற மனப்போக்கு இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்க மாட்டார்; பேய்தான் இருக்கும்; சைத்தான் தான்