பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருக்குறள் வழிபாட்டின் பயன்கள் நான்கு.

1. நெஞ்சத்தில் இறைவனை இருக்கச் செய்து நினைத்தல்; சிந்தித்தல்.

2. இறைவனைத் தலை தாழ்த்தி வணங்குதல்.

3. இறைவன் புகழ் கூறுதல்.

4. விருப்பு, வெறுப்பின்றிப் பொறிகளில் தூய்மையுடன் இறை நெறியில் வாழ்தல்.

பொறிகளில் தூய்மை என்பது நல்லனவும் உரிமையுடையனவும், இன்றியமையாதனவுமே. விரும்புதல், துய்த்தல்.

பொறிகளின் இயல்பு மற்றவர்க்கு இனிமையாயமைத்தல்.

இறைவனைச் சிந்தித்தல் (தியானித்தல்) தனக்குவமையில்லாதவனாகவும், எண்குணத்தானாக இருப்பவனும் என் மனத்தின்கண் எழுந்தருளி அருளுபவனும், எல்லாப் புகழையும் தனக்கேயுடையவனுமாகிய இறைவனுக்குப் போற்றி! போற்றி!

2. வான் சிறப்பு

இறைவனின் அருளிப் பாடாக நினைந்து போற்றத்தக்க இயற்கை நிகழ்வு வான்மழை, ஆதலால் வான்மழை போற்றுதல் வேண்டும். இங்குப் போற்றுதல் என்பது, தூய்மையாகப் பாதுகாத்துப் பேணிப் பயன்படுத்துதல்.

வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. ஆதலால், மழைத்தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் ஆளுமை (நிர்வாகம்) இன்றியமையாதது. தண்ணீரை வீணடிக்கக் கூடாது. தண்ணீரைக் கலப்படம் ஏற்படாமலும், தூய்மை கெடாமலும் பாதுகாக்கவேண்டும்.