பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



89



3. தனக்குத் தெரியாதவை பல மற்றவர்களுக்குத் தெரியும் என்று கருத வேண்டும்.

4. மற்றவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளும், ஆர்வம் வேண்டும்.

5. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைத்தானே பெருமையடித்துக் கொள்ளுதல் கூடாது.

6. தற்செருக்கு இல்லாது பழகுதல் வேண்டும்.

7. பிறர், தன்னைப் புகழ அனுமதித்தல் கூடாது.

‘காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.’

122

உயிர்களுக்கு அடக்கத்திலும் சிறந்த செல்வம் இல்லை. ஆதலால், அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்கவும்.

1. பொருள் ஈட்டவும் அடக்கம் துணை செய்யும்; பொருள் செய்யும் முயற்சியில் தொடர்புடையாரிடத்திலெல்லாம் அடக்கமாகப் பழகுக.

2. அடக்கமுடையராக இருப்பது, பொருள் காக்கும் முயற்சியிலும் துணைசெய்யும். மற்றவர் இவர் செல்வமுடையாரென்று கருதாவண்ணம் அடங்கி ஒழுகினால் செல்வத்திற்குக் கேடு இல்லை; காப்புப் பெறும்.

3. அடக்கமுடையராக வாழ்ந்து, செல்வத்தைத் துய்ப்பதில் பலமடங்கு இன்பம் உண்டு. ஆதலால், அடக்கமுடையாராக இரு; செல்வத்தின் மிடுக்கைக் காட்டாதே.

‘செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.’

123