பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொல்லனை எதிர்த்துப் போராடியிருப்பான்; ஐயப்படும் காவலருக்கு எடுத்துக் கூறியிருப்பான். ஏன் நாடாளும் அரசன் அவைக்கும் சென்று எடுத்துக் கூறவும் முடியும்.

கோவலனின் வாழ்க்கை அந்தத் திசையில் செல்லவில்லை. சென்ற காலத் தவறுகளால் விளைந்த ஊழிற்குள்ளேயே அமிழ்ந்து விடுகிறான். அவனுக்கு ஊழினை எதிர்த்து நிற்கும் ஆற்றலில்லை. எழுந்து நடக்கும் ஆற்றலில்லாத சிங்கத்தைச் சுண்டெலிகள் கூட, எதிர்த்து வெற்றி கொள்ள முடியும் அல்லவா?

வாழ்கின்ற பொழுது சீராக, சிறப்பாக வாழ்தல் நன்றே. அறிந்தோ அறியாமலோ தவறுகள் நிகழ்ந்து விடுமாயின், இழப்புகள் ஏற்பட்டு விடுமாயின், அதனை நினைத்துக் கவலைப்பட்டு என்ன பயன்? கறையான், மரத்தை அரித்து அழிக்கும். கவலை, மனத்தை அரித்து அழிக்கும்.

தவறுகளை உணர்ந்து தவறுகள் நீங்கிய சிறப்புடைய வாழ்க்கை வாழ, அங்ஙனம். வாழ்தலுக்குரிய களங்களை அமைக்க அடலேறுபோல, அயர்விலாத முயற்சிகளை மேற்கொள்ளும் வாழ்க்கையே, வாழ்க்கை; அது அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை, ஊழையும் உப்பக்கம் காணும் வாழ்க்கை வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

இந்த வாழும் நெறியைக் கோவலன் கடைப்பிடிக்க வில்லை. அதன் காரணமாகவே, அவனைச் சராசரிப் பொற்கொல்லன் கூட, வெற்றி கொள்ள முடிந்தது. கோவலனின், ஆள்வினையிழந்த வாழ்க்கையின் தீயூழ் மன்னவனின் தீயூழோடு கூட்டுச் சேர முடிந்தது. முடிவு, கோவலன் கொல்லப்படுதலாகும்.

அவன், சென்ற கால ஊழின் காரணமாக கொல்லப்பட்டான் என்று கூறுவதில் தவறில்லை. ஆயினும், அந்த ஊழினை வெற்றி காணும் ஆகூழ்ப் படைக்கக் கோவலன் முயன்றிருப்பானாகில் அவன் வெற்றி