பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிரைப் பிரிப்பான். ஆதலால் அருமைக்குரிய தலைவன் பெருமானே! இதனை அறிந்து அருள்செய்க! என்ற வகையில் திருமுகத்தை எழுதி வசந்தமாலையின் வழி கொடுத்தனுப்பினாள்.

மாதவியைப் பிரிந்த கோவலன் இன்னமும் வீட்டுக்குச் செல்லவில்லை. கடைவீதி மருங்கிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அங்குக் கோவலனைக் கண்டு வசந்தமாலை திருமுகத்தைக் கொடுக்கிறாள்.

கோவலன் நிலை எதிர்மாறாக இருந்தது. கோவலன் மாதவியின் திருமுகத்துக்கிசைந்து வர உடன்படாததோடு, மாறாக மாதவியைக் கடுஞ் சொற்களால் ஏசித் தீர்க்கிறான். முன்னர்க்கூடி வாழ்ந்த காலத்தில் மாதவி ஊடல் தவிர்த்துக் கூடுதற்குத் துணையாக இருந்த நிகழ்ச்சியைக் கூட நடிப்பு என்று கூறுகிறான். திருமுகத்தை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறான்.

இதனால் மாதவியின்பால் குறை இல்லை என்பது தெளிவு எனினும் கோவலனிடத்திலிருந்த தணியாக் காதலால் மாதவி மீண்டும் முயற்சி செய்கிறாள்.


மாதவியின் மாண்பு

மாதவி கோவலனின் துனியை மாற்ற முடியாமையை நினைந்து வருந்துகிறாள். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. மீண்டும் கோசிகன் என்ற ஓர் அந்தணாளனை அணுகி, கோவலனுக்குத் திருமுகம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறாள். இத்திருமுகத்தின் வாயிலாக மாதவியின் வளர்ந்த நிலையை அறியமுடிகிறது.

காதலர் இருவரிடையில் புலவியோ, துணியோ ஏற்பட்டு அதுமாறாது நீட்டித்தால் இருவரில் ஒருவர் தம் நிலையை வற்புறுத்தாது மற்றவர் நிலையைச் சார்ந்து ஒழுகுதல் கடமை; நாகரிகம். இப்படி ஒழுகத் தலைப்படின்